அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
சென்னை: நடிகைகளில் விசிட் அடித்துக் கொண்டிருக்கும் மாலத்தீவுக்கு இப்போது பிரபல ஹீரோ குடும்பத்துடன் சென்றுள்ளார்.
பிரபல மலையாள நடிகர், பிருத்விராஜ். இவர் நடித்து கடைசியாக வெளியான, அய்யப்பனும் கோஷியும் படம் சூப்பர் ஹிட்டானது.
இவர், தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

ஓகே கண்மணி
இப்போது, ஆடுஜீவிதம் என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இதை பிளஸ்சி இயக்குகிறார். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது. கொரோனா பரவல் தீவிரம் அடைந்த போது, இந்தப் படக்குழு ஜோர்டானில் சிக்கித் தவித்தது. பிறகு சிறப்பு விமானம் மூலம் இந்தியா திரும்பியது.

வாரியம் குன்னன்
இதையடுத்து ஆஷிக் அபு இயக்கும் வாரியம் குன்னன், அந்தாதுன் ரீமேக், குருதி, கடுவா, ஜன கண மன உட்பட சில படங்களில் நடித்து வருகிறார், பிருத்வி ராஜ். அந்தாதுன் ரீமேக்கை பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இயக்குகிறார். இந்தியின் ஆயுஷ்மன் குரானா நடித்த கேரக்டரில் பியானோ மாஸ்டராக பிருத்விராஜ் நடிக்க இருக்கிறார்.
இறங்கும் வீடியோ
இதற்கிடையே இவர், இப்போது, மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவருடன் மனைவி சுப்ரியா மேனன் மற்றும் மகள் அலங்கிரிதா ஆகியோரும் சென்றுள்ளனர். விமானத்தில் இறங்கும் வீடியோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு நெட்டிசன் கிண்டலாக, நீங்க பைலட்டுன்னு எனக்கு தெரியாதே? என்று கூறியுள்ளார்.

டோலிவுட், பாலிவுட்
கடந்த சில மாதங்களாக டோலிவுட், பாலிவுட், கோலிவுட் நடிகைகள் மாலத்தீவுக்கு விசிட் அடிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். நடிகைகள் டாப்ஸி, ரகுல் பிரீத் சிங், சமந்தா, வேதிகா, ஹன்சிகா, காஜல், தமன்னா உட்பட பலர் அங்கு சென்றிருந்தனர். அங்கிருந்தபடியே புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.

அவங்க ஏரியாவாச்சே?
இந்நிலையில் பிருத்விராஜும் அங்கு சென்றுள்ளார். சில ரசிகர்கள், அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே? என்று அவரிடம் கூறியுள்ளனர். சிலர் 'இது, சும்மா டூரா.. அடுத்து டைரக்ஷன் பண்ணப் போற படத்துக்கு லொகேஷன் பார்க்க போயிருக்கீங்களா? என்று கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











