Aadujeevitham box office: ஆடுஜீவிதம் மூன்றாம் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?
சென்னை: பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் உருவான ஆடுஜீவிதம் பான் இந்திய திரைப்படமாக வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மார்ச் 28ந் தேதி வெளியான இப்படம் முதல் நாளில் 16.7கோடியை வசூலித்த நிலையில், மூன்றாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கேரளாவைச்சேர்ந்த நஜீப் ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறான்.குடும்ப கஷ்டத்துக்காக வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் கிடைத்த பணத்தைவைத்துக்கொண்டு சவூதி அரேபியாவிற்கு செல்கிறான். அங்கு பாலைவனத்தில் ஆடுகளை மேய்க்கும் வேலையில் சேரும் இவனுக்கு பல நாட்கள் கழித்துத்தான் நான் அடிமையாக இருப்பது தெரிய வருகிறது. கர்ப்பிணியாக இருந்த தனது மனைவியை அங்கிருந்து தப்பிக்கும் முயற்சி செய்கிறான் ஆனால், அவனால் தப்பிக்க முடியால் அங்கே அடிமை வாழ்க்கை வாழ பழகிக்கொள்கிறான்.

ஆடுஜீவிதம்: ஒரு நாளில் தன்னுடன் வந்த நண்பனின் மூலம் பாலைவனத்தில் இருந்து தப்பிக்கும் வழி கிடைக்க நஜீப் மீண்டும் தப்பிக்கும் முயற்சி செய்கிறான் அங்கிருந்து அவர் எப்படி தப்பினார? அவருடைய வாழ்க்கை மாறியதா? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பதை இயக்குநர் உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறார். மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர் அறிவிப்பு: ரூ.80 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அனைத்து விதமான ரசிகர்களின் மனதையும் கவர்ந்து வசூலை அள்ளி வருகிறது. இப்படம் மார்ச் 28ந் தேதி வெளியாகி முதல் நாளில் படம் இந்திய அளவில் ரூ.8.50 கோடியையும், வெளிநாடுகளில் ரூ.6.50 கோடியையும் வசூலித்த நிலையில் படக்குழு முதல் நாளில் 16.7 கோடியை வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மொத்த வசூல்: இரண்டாம் நாள் வசூல் ரூ. 6.50 கோடியும், கேரளாவில் மட்டும் ரூ.5.25 கோடி வசூலான நிலையில், மூன்றாம் நாளான நேற்று இத்திரைப்படம் ரூ.7.75 கோடியை வசூலித்துள்ளது. இப்படத்தின் மொத்த வசூல் ரூ 21.63 கோடியாக உள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் இந்த படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவின் 400 திரைகளில் இப்படம் திரையிடப்பட்டன. தமிழகத்தில் குறைவான தியேட்டரில் திரையிடப்பட்ட இப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை அடுத்து தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











