Aadujeevitham Day 1 collection: ஒரு சராசரி மனிதனின் உண்மைக்கதை.. ஆடுஜீவிதம் முதல் நாள் வசூல்!

சென்னை: பிளெஸி இயக்கத்தில் பிருத்விராஜ் , அமலாபால் , நடித்துள்ள ஆடு ஜீவிதம் படம் நேற்று திரையரங்கில் வெளியானது. ஏ. ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ள இப்படம், 16 ஆண்டு கால காத்திருப்பிற்கு பிறகு தியேட்டரில வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து இப்போது பார்க்கலாம்.

கேரளத்திலிருந்து வயிற்று பிழைப்பிற்காக அரபு நாட்டுக்கு செல்லும் இருவர், அரேபியாவில் மாட்டிக்கொண்டு ஆட்டுப் பட்டிகளில் ஆடுகளாகவே வாழ்ந்த துயரக் கதைதான் இந்த நாவலின் கதைக்கரு. 2010 ம் ஆண்டு கேரள சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்த நாவல், தமிழிலும் இந்த நாவல் மொழிப்பெயர்க்கப்பட்டது. இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் ஆடு ஜீவிதம். உயிர் பிழைக்க போராடும் மனிதனின் போராட்டத்தை 3 மணி நேர படமாக ஆக்கியிருக்கிறார் இயக்குநர் பிளெஸ்ஸி.

Prithviraj Sukumaran s Aadujeevitham Day 1 Box Office Collection

ஆடுஜீவிதம்: வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசையில், சொந்த ஊரையும் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியையும் விட்டு அரேபியா செல்கிறார்கள் கதாநாயகன் நஜீப் முகமது பிருத்விராஜ் மற்றும் அவரது நண்பன் ஹக்கீம். அந்தஇடத்தில், அவர்களைஅழைத்துச் செல்ல எந்த ஏஜெண்ட் வராத காரணத்தினால் தவறான ஏஜெண்டிடம் மாட்டிக்கொண்டு ஆடு மேய்க்க பாலைவனத்திற்கு செல்கின்றனர். பாலைவனத்தில் நஜீப் தான் அடிமையாக்கப்பட்டிருப்பதையே ஒரு சில நாட்களுக்குப் பிறகுதான் தெரியவருகிறது.

பாலைவனத்தில் அடிமை: பாலைவனத்தில்,மனைவியின் நினைவுகளில் நஜீப் நாட்களைக் கழித்து வரும், அங்கிருந்து தப்பி ஓடு முடிவு செய்கிறான். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைய அனைத்தையும் கைவிட்டு தனது அடிமை வாழ்க்கையை ஏற்றுக் கொள்கிறார். இந்த நேரத்தில், எதிர்பாராத வகையில் ஒரு நாள் தனது நண்பன் ஹக்கீமை மீண்டும் சந்திக்கிறார் நஜீப். அப்போது அவன் இந்த பாலைவனத்தில், இருக்கும் ஒருவன்குக், இருந்து தப்பிக்கும் வழி தெரியும் என்றும், அவன் இருவரையும் இந்த இடத்தைவிட்டு அழைத்துச் செல்வான் என்றும் ஹக்கீம் சொல்கிறான். நஜீப் தனது வீட்டிற்கு சென்றாரா? இல்லையா? என்பதே ஆடுஜீவிதம் திரைப்படத்தின் கதை. இந்த படத்திற்காக பிரித்விராஜ் குண்டாகவும், ஒல்லியாகவும் மாறி மாறி நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அதேபோல ஏ ஆர் ரஹ்மானின் இசை பல இடத்தில் படம் பார்ப்பவர்களை அழவைத்துவிட்டது.

முதல் நாள் வசூல்: மலையாளம், தமிழ்,இந்தி,தெலுங்கு,கன்னடம் என பான் இந்திய திரைப்படமாக தியேட்டரில் நேற்று வெளியான ஆடுஜீவிதம் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. முதல் நாளில் இப்படம் 7.45 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. வரும் அடுத்தடுத்த நாட்கள் விடுமுறை தினம் என்பதால், இப்படம் மேலும் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X