Aadujeevitham: பிருத்விராஜின் ஆடு ஜீவிதம்.. சூப்பர் அப்டேட்டை கொடுத்த படக்குழு!
சென்னை: மலையாள நடிகர் பிரித்விராஜ், நஜீப் முகமது என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஆடு ஜீவிதம். இதில் நடிகை அமலா பால் பிரித்விராஜின் மனைவியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஆஸ்கார் வின்னர்களான ஏ ஆர் ரகுமான் மற்றும் ரசூல் குட்டி ஆகிய இருவரும் பணியாற்றி உள்ளனர். இப்படம் குறித்த சூப்பரான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஆடு ஜீவிதம் படத்தை மலையாள சினிமாவின் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய 'ஆடு ஜீவிதம்'என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. கடனை அடைப்பதற்காக சவூதி செல்லும் பிரித்விராஜ், அங்கு ஆடு மேய்ப்பவராக மாறுகிறார். அதைத் தொடர்ந்து அவரது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதுதான் ஆடு ஜீவிதம் படத்தின் கதை.

ஹாட்டான முத்தக்காட்சி : இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. மூன்று நிமிடம் ஓடக்கூடிய அந்த டிரைலரில் பிரித்விராஜ் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பாலைவனத்தில் கஷ்டப்படும் பிரித்விராஜின் உணர்ச்சிமயமான காட்சிகள் மனதை பிசைகின்றன. மேலும், இந்த டிரைலரில் ஹாட்டான முத்தக்காட்சி இடம் பெற்று இருந்து.
அமலாபால் விளக்கம்: இந்த லிப் லாக் காட்சியில் நடித்ததற்காக அமலா பால் பெரும் சர்ச்சையில் சிக்கினார். தொடர்ந்து சர்ச்சை எழுந்ததால், விளக்கம் அளித்த அமலா பால், இந்த படத்தின் கதையை சொல்லும் போதே பிரித்விராஜ், முத்தக்காட்சி பற்றி விளக்கமாக கூறினார். படத்திற்கும், கதைக்கும் அந்த முத்தக்காட்சி மிகவும் முக்கியமானது என்பதால் நான் நடித்தேன் என்றார்.
சூப்பர் அப்டேட்: ஆடு ஜீவிதம் திரைப்படம் மார்ச் 28ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. நடிகர் பிருத்விராஜ், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார்! இந்த முழு கதாபாத்திரத்தையும் மீண்டும் ஒரு முறை வாழ்ந்திருக்கிறேன். பின்னர் அதை 4 வெவ்வேறு மொழிகளில் மீண்டும் 4 முறை பார்த்திருக்கிறேன். எபிக் திரைப்படம் இது, நஜீப்பின் நம்பமுடியாத உண்மை கதையைக் காணத் தயாராகுங்கள் எனக் கூறியுள்ளார்.
தேசிய விருது கிடைக்கும்: இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ரசூல் பூக்குட்டியின் சவுண்ட் டிசைனில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் சுனில் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது. தேசிய விருது பெற்ற பிளெஸ்ஸி இயக்கத்தில் உருவாகிய இந்த படமும் நிச்சயம் தேசிய விருது வெல்லும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











