Prithviraj: மிரட்டல் லுக்கில் பிரித்வி ராஜ்..பிறந்தநாளில் வெளியான சலார் பட போஸ்டர்!

சென்னை: மலையாள நடிகர் பிருத்வி ராஜின் பிறந்தநாளை முன்னிட்டு சலார் படக்குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த கேஜிஎஃப் 2 படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கி வரும் திரைப்படம் சலார்.

Prithviraj Sukumarans first look poster from the film Salaar

ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமானப் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்வி ராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.

சலார்: பான் இந்திய திரைப்படமாக தயாராகி வரும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் டிசம்பர் 22ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையே படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை இன்னும் சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் எடுக்க பிரசாந்த் நீல் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு தயாரிப்பு சம்மதம் தெரிவித்ததை அடுத்து, படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

காத்திருக்கும் பிரபாஸ்: பாகுபலி படத்திற்குப்பிறகு பிரபாஸ் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. அப்படி பெரும் எதிர்பார்ப்போடு வெளிவந்த பிரபாஸின் சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து, ராமாயண கதைக்களத்தைக் கொண்டு பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஆதிபுருஷ் திரைப்படமும் ஏமாற்றத்தை கொடுத்ததால், சலார் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் கவர்ந்து யூடியூபில் 129 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்தது.

மிரட்டும் பிரத்வி ராஜ்: இந்நிலையில், மலையாள சினிமாவில் மிக முக்கியமான நடிகராக வலம் வரும் பிரித்வி ராஜ் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், சலார் படக்குழு பிரித்வி ராஜின் மிரட்டலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அந்த போட்டோவில் பிரித்வி ராஜ், நெற்றியில் திலகமிட்டு, மூக்குத்தி போட்டுக்கொண்டு அட்டகாசமாக இருக்கிறார். சலார் படத்தில் வில்லனாக நடிக்கும் பிரித்வி ராஜ், வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Prithviraj Sukumarans first look poster from the film Salaar

தமிழ் படங்களில்: நடிகர் பிருத்வி ராஜின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அவர்து ரசிகர்களும் திரைத்துறையினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் பிரித்வி ராஜ், கே.வி.ஆனந்த் இயக்கிய கனா கண்டேன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு, பாரிஜாதம், சத்தம் போடாதே, மொழி, கண்ணாம்பூச்சி ஏனடா, வெள்ளித்திரை, அபியும் நானும் போன்ற தமிழ்படங்களில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X