கொஞ்சம் ரெஸ்ட் வேணும்.... சினிமாவுக்கு திடீர் லீவு போட்ட ஹீரோ!

By

கொச்சி: சினிமாவுக்கு மூன்று மாதம் விடுமுறை விட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் நடிகர் பிருத்விராஜ்.

தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்தவர், மலையாள ஹீரோ பிருத்விராஜ்.

Prithviraj takes a break from films, reserves time for family

இவர் மோகன்லால் நடித்த லூசிபர் என்ற படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். இந்தப் படம் ஹிட்டானது. அடுத்து எம்புரான் என்ற படத்தை இயக்க இருக்கிறார்.

இதற்கிடையே அவர் நடித்து வந்த அய்யப்பாவும் கோஷியும் என்ற படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதையடுத்து அவர் சினிமாவுக்கு சில மாதங்கள் பிரேக் விடப் போவதாக செய்திகள் வந்தன.

மனைவி சுப்ரியா, மகள் அலங்கிரிதா மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டன. இந்நிலையில் இதை உறுதி செய்துள்ளார் பிருத்விராஜ்.

அதன்படி, அடுத்த மூன்று மாதங்களுக்கு சினிமாவுக்கு லீவு விட்டிருப்பதாகக் கூறியுள்ள பிருத்விராஜ், ஆடுஜீவிதம் என்ற தனது லட்சிய படத்துக்கான ஒரு பயிற்சியாக இந்த விடுமுறையை எடுத்துக்கொள்கிறேன். எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X