ஒட்டுத்துணி இல்லாமல் நடித்த பிருத்விராஜ்.. 3 நாள் பட்டினி கிடந்தாராம்.. ஒளிப்பதிவாளர் பகீர் தகவல்!
திருவனந்தபுரம்: பிளஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலா பால், கே.ஆர். கோகுல், ஜீம் ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மார்ச் 28ம் தேதி வெளியான ஆடு ஜீவிதம் திரைப்படம் 70 கோடி வசூலை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் 100 கோடி வசூலை இந்த படம் இந்த வார இறுதிக்குள் கடக்கும் எனக் கூறுகின்றனர்.
ஆடு ஜீவிதம் படத்தை உலகம் முழுவதும் உள்ள விமர்சகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் கொண்டாடி வருகின்றனர். சோஷியல் மீடியாவில் படத்தை பாராட்டும் பலருக்கும் பிருத்விராஜ் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்து வருகிறார்.

அந்த படத்தில் இடம்பெறும் ஒரு முழு நிர்வாணக் காட்சிக்காக மனுஷன் 3 நாட்கள் பட்டினி கிடந்ததாகவும் அந்த காட்சி எப்படி படமாக்கப்பட்டது என்பது குறித்தும் படத்தின் ஒளிப்பதிவாளர் சுனில் கே.எஸ். சமீபத்திய பேட்டியில் கூறி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
அமலா பாலுடன் அண்டர் வாட்டரில்: தடுப்பு கொட்டா பாத்ரூமில் வெறும் பாவாடை மட்டுமே கட்டிக் கொண்டு குளித்துக் கொண்டிருக்கும் அமலா பாலை அப்படியே தூக்கிக் கொண்டு சென்று ஆற்றில் தூக்கிப் போட்டு அவருக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கும் அந்த அண்டர் வாட்டர் காட்சி அத்தனை அழகியலுடன் அட்டகாசமாகவும் ரொமான்டிக்காவும் படமாக்கப்பட்டு இருக்கும். அப்படி ஆத்துல குளித்த மனுஷனுக்கு சவுதி பாலைவனத்தில் குளிக்கவோ வெளிக்குப் போனால் கழுவுவோ தண்ணீர் கூட கிடைக்காத சோகத்தில் அழுக்கு மூட்டையாக ஆடுகளுடன் ஆடாகவே நாற்றம் பிடித்த உடலுடன் வாழ்ந்து வருவார்.

ஒட்டுத்துணி இல்லாமல்: ஒரு கட்டத்தில் அந்த பாலைவனத்தில் இருந்து தப்பித்து வீட்டுக்குப் போகப் போகிறோம் என நினைத்தவுடன் குடிக்க வைத்திருக்கும் தொட்டி தண்ணீரை எடுத்து குளிக்க ஒட்டுத்துணி கூட இல்லாமல் நிர்வாணமாக சென்று பிருத்விராஜ் குளிக்கும் காட்சியில் சுமார் 3 வருடங்கள் அந்த பாலைவனத்தில் சரியான சாப்பாடு மற்றும் தண்ணீர் இல்லாமல் அவர் உடம்பு எந்தளவுக்கு மெலிந்து போய் விட்டது என்பதை ஒளிப்பதிவாளர் படமாக்கி இருப்பார்.

3 நாள் பட்டினி: அந்த ஒரு காட்சியை எடுக்க அனைத்து திட்டங்களையும் முன்பே போட்டு விட்டோம். சரியாக சுமார் 3.30 மணிக்கு அந்தக் காட்சி எடுக்கப்பட்டது இன்னும் நினைவிருக்கிறது. அதற்காக பிருத்விராஜ் சுமார் 3 நாட்கள் 72 மணி நேரம் உணவே அருந்தாமல் பட்டினி கிடந்தார். ஏற்கனவே உடல் எடையை அதிகமாக குறைத்து நடித்து வந்த நிலையில், தொடர்ந்து பட்டினி கிடந்த அவர் கடைசியாக தண்ணீர் கூட குடிக்கவில்லை என ஒளிப்பதிவாளர் கூறியுள்ளார்.
30 எம்எல் வோட்கா: அந்த காட்சியை படமாக்குவதற்கு முன்னதாக 30 எம்எல் வோட்கா அவருக்கு கொடுக்கப்பட்டது. வோட்கா என்ன செய்யும் என்றால் உடலில் உள்ள தண்ணீரை மொத்தமாக சுண்டி இழுத்து விடும். அந்த கடைசி சீனில் அவர் உடம்பில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் நடித்திருந்தார். அருகில் இருந்து பார்த்த எல்லோருமே கண் கலங்கி விட்டோம் என ஒளிப்பதிவாளர் சுனில் அளித்த பேட்டியை கேட்ட ரசிகர்கள் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கே பிருத்விராஜ் தகுதியானவர் என பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











