GOAT Life: 9 அவார்டுகளை அள்ளிய ஆடு ஜீவிதம்.. கேரளா மாநில விருதுகளில் பிரித்விராஜ் படம் செய்த சம்பவம்

கொச்சி: இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் ஆடு ஜீவிதம். இந்த படத்தில் பிரித்விராஜ் சுகுமாரன், அமலா பால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கேரள மாநில அரசு விருதுகளில் இந்த படம் மொத்தம் 9 விருதுகளை வென்றுள்ளது. இது குறித்து படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியுடன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள். மேலும் படக்குழுவினருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆடு ஜீவிதம் படத்தை பொறுத்தவரையில் இந்த படம் உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட ஆடு ஜீவிதம் என்ற நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் ஆகும். இந்த நாவல் கேரளாவில் இருந்து அரபு நாட்டுக்கு வேலைக்கு சென்ற நஜீப் என்பவரின் வாழ்க்கை சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல் தான், ஆடு ஜீவிதம். இந்த படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றது. இந்த படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு பாராட்டுகள் வெளிநாடுகளில் இருந்து எல்லாம் குவிந்தது. இந்த படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர். ரகுமானுக்கு உலகப் புகழ்பெற்ற HAMMA விருது வழங்கப்பட்டது.

ஆடு ஜீவிதம் படம் ரிலீஸ் ஆன போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனது. இந்த படம் தி கோட் லைஃப் என்ற பெயரில் மலையாளத்தில் நேரடியாக வெளியானது. மற்ற மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட்டது. படம் நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக்கொண்டு உள்ளது.

Prithviraj Wins Best Actor Aadujeevitham The Goat Life Wins 9 Awards 54th Kerala State Film Awards

ஆடு ஜீவிதம்: இந்த படத்திற்கு 54வது கேரள அரசு திரைப்பட விருதுகளில் மொத்தம் 9 விருதுகளை வென்றுள்ளது. சிறந்த நடிகருக்காக பிரித்விராஜ்க்கும், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நாவலை தழுவிய திரைக்கதைக்கு இயக்குநர் பிளெஸ்ஸிக்கும் வழங்கப்பட்டது. அதேபோல், சிறந்த ஒளிப்பதிவாளருக்காக கே.எஸ். சுனிலுக்கும் சிறந்த ஒலி அமைப்புக்காக ரசூல் பூக்குட்டி மற்றும் ஷரத் மோகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

Prithviraj Wins Best Actor Aadujeevitham The Goat Life Wins 9 Awards 54th Kerala State Film Awards

9 விருதுகள்: இது மட்டும் இல்லாமல், சிறந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் விருது ரஞ்சித் அம்பாடிக்கும், சிறந்த கலரிஸ்ட் விருது வைஷாக் சிவாவுக்கும், Best Film with Popular Appeal and Aesthetic Value என்ற தலைப்பிலும் ஆடு ஜீவிதம் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த நடிகருக்கான ஸ்பெஷல் ஜூரி விருது, ஆடு ஜீவிதம் படத்தில் நடித்த கே.ஆர். கோகுலுக்கு வழங்கப்பட்டது. இப்படி படம் மொத்தம் 9 விருதுகளை வென்றுள்ளது. இது படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Prithviraj Wins Best Actor Aadujeevitham The Goat Life Wins 9 Awards 54th Kerala State Film Awards

எம்புரான்: சிறந்த நடிகருக்கான விருதினை வென்ற பிரித்விராஜை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான படத்திற்கு இந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருதினைப் பெற்றுள்ளார். அதேபோல் இந்த ஆண்டு மார்ச் மாதம், இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான லுசிஃபர் 2 எம்புரான் படத்திற்காக விருதுகளைக் குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வரும் 24ஆம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X