Aadujeevitham Box Office: பெரியோனே.. ரஹ்மானே.. மஞ்சுமெல் பாய்ஸை வசூலில் ஓவர்டேக் செய்த ஆடு ஜீவிதம்!

திருவனந்தபுரம்: பிளஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலா பால் நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வசூலை ஈட்டி வருகிறது. பென்யமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் நாவலில் எழுத்துக்களாக இருந்த ஒவ்வொரு காட்சியையும் ரத்தமும் சதையுமாக திரையில் காட்டி திகைக்க வைத்துள்ளனர்.

நாவலில் எழுதும் போது ஒரு பிரபல கதாபாத்திரத்தை எவ்வளவு பில்டப் செய்து வேண்டுமானால் காட்டி விடலாம். படிக்கும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கற்பனையாக அந்த கதாபாத்திரம் தோன்றும். ஆனால், படமாக எடுக்கும் போது ரசிகர்கள் செய்து வைத்த கற்பனையை மிஞ்சிய காட்சிகள் இடம்பெற்றால் மட்டுமே அதை ரசிகர்கள் வரவேற்பார்கள்.

Prithviraj s Aadujeevitham joins 50 crore club


நஜீப் கதாபாத்திரமாகவே பிருத்விராஜ் வாழ்ந்தது தான் ஆடுஜீவிதம் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இவ்வளவு பெரிய வெற்றி பெறக் காரணம் என்கின்றனர்.

நிறைமாத கர்ப்பத்துடன் புரமோஷன்: சில முன்னணி நடிகர்கள் மட்டும் நடிகைகள் தங்கள் படங்களின் புரமோஷனுக்கு வருவதை சாதாரண காரணங்களுக்காக தவிர்த்து வருகின்றனர். ஆனால், நடிகை அமலா பால் கர்ப்பிணியாக இருந்த நிலையிலும், ஆடு ஜீவிதம் படத்திற்காக புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தில் அமலா பால் நடித்துள்ள அந்த அண்டர் வாட்டர் சீன் மற்றும் லிப் கிஸ் காட்சிகள் கமர்ஷியல் ரசிகர்களை கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தொடர்ந்து பிருத்விராஜ் இந்த படத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க ரொம்பவே கஷ்டப்பட்டார். அவரது உழைப்பும் முயற்சியும் தற்போது வசூல் வேட்டையாக மாறி சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

50 கோடி கிளப்: கடந்த வியாழக்கிழமை வெளியான ஆடு ஜீவிதம் திரைப்படம் உலகளவில் 50 கோடி வசூலை ஈட்டியிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 27 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியுள்ள இந்த படம் வெளிநாடுகளில் ஒட்டுமொத்தமாக 23 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக கூறுகின்றனர். உலகத்தரமான படைப்பாக ஆடு ஜீவிதம் உருவாகி இருக்கும் நிலையில், உலகெங்கும் வாழும் மலையாளிகள் மற்றும் அவர்களை தாண்டி சினிமா ரசிகர்கள் என பலரும் ஆடு ஜீவிதம் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

மஞ்சுமெல் பாய்ஸ் வசூலை மிஞ்சும்: மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் 7 நாட்களில் 50 கோடி வசூலை கடந்தது. ஆனால், 3 நாட்களிலேயே உலகளவில் ஆடு ஜீவிதம் திரைப்படம் 50 கோடி வசூலை கடந்துள்ளது. இதே ஓட்டம் ஓடினால் கூடிய விரைவில் 200 கோடி வசூலை இந்த படமும் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X