வணக்கம் சென்னையில் கலக்கிய சிவா -பிரியா ஆனந்த் ஜோடி... மீண்டும் இணையும் காசேதான் கடவுளடா ரீமேக்

சென்னை : நடிகர் மிர்ச்சி சிவா மற்றும் பிரியா ஆனந்த் ஜோடி வணக்கம் சென்னை படத்தில் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தியது.

ரசிகர்களிடம் இந்த ஜோடி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைகிறார்கள்.

ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவாகவுள்ள காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக்கில் சிவாவிற்கு மீண்டும் ஜோடியாகியுள்ளார் பிரியா ஆனந்த்.

2013ல் வெளியான படம்

2013ல் வெளியான படம்

நடிகர் மிர்ச்சி சிவா மற்றும் பிரியா ஆனந்த் கடந்த 2013ல் வெளியான வணக்கம் சென்னை படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி வெகுவாக பாராட்டப்பட்டது. அனிருத்தின் இசையில் பாடல்களும் சிறப்பான வரவேற்பை பெற்றது.

காசேதான் கடவுளடா ரீமேக்

காசேதான் கடவுளடா ரீமேக்

இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் இணையவுள்ளது. ஆர் கண்ணன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகவுள்ள காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக்கில் சிவா, யோகிபாபு உள்ளிட்டவர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் லஷ்மி நடித்த கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்த் நடிக்கவுள்ளார்.

1972ல் வெளியான படம்

1972ல் வெளியான படம்

முத்துராமன், தேங்காய் சீனிவாசன் நடித்த கேரக்டர்களில் சிவாவும் யோகிபாபுவும் நடிக்கவுள்ளதாக இயக்குர் தெரிவித்துள்ளார். கடந்த 1972ம் ஆண்டில் வெளியான இந்த படம் எவர்கிரீன் காமெடி படமாக இன்றும் போற்றப்படுகிறது. இந்த படத்தில் மனோரமாவும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அந்த கேரக்டரில் ஊர்வசி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து சூட்டிங்

தொடர்ந்து சூட்டிங்

பல தலைமுறைகளை கடந்தும் ரசிகர்களால் விரும்பப்படும் இந்த படத்தை நவீன காலத்திற்கு ஏற்றவகையில் ரீமேக் செய்யவுள்ளதாகவும் கண்ணன் கூறியுள்ளார். வரும் 15ம் தேதி படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு ஒரே கட்டமாக 35 நாட்கள் தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X