மீண்டும் ஆர்ஜே பாலாஜியுடன் ஜோடிப் போடப் போகும் பிரபல நடிகை.. தீயாய் பரவும் தகவல்!
சென்னை: தமிழில் ரீமேக் ஆகும் இந்தி படத்தில் ஆர்ஜே பாலாஜியுடன் பிரபல நடிகை இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியில் வெளியாகி பட்டையை கிளப்பிய படம் பதாய் ஹோ. 29 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் 220 கோடி ரூபாய் வசூலை குவித்தது.
இந்நிலையில் இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இந்தப் படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி இயக்கி நடிக்கவுள்ளார்.

நடிகை பிரியா ஆனந்த்..
இயக்குநர் என்ஜே சரவணனுடன் இணைந்து ஆர்ஜே பாலாஜி இந்தப் படத்தை இயக்குகிறார். இந்நிலையில் இந்தப் படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, நடிகை பிரியா ஆனந்த் இந்தப் படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் உறுதியாகவில்லை
ஏற்கனவே எல்கேஜி படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் பிரியா ஆனந்த் ஆர்ஜே பாலாஜியுடன் இணையலாம் என கூறப்படுகிறது. ஆனால் பிரியா ஆனந்த் இந்தப் படத்தில் நடிக்கிறாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

முக்கிய கதாப்பாத்திரம்..
ஆர் ஜே பாலாஜி ஹீரோவாக அறிமுகமான எல்கேஜி படத்தில் அரசியல் ஸ்ட்ரேட்டஜிஸ்ட்டாக நடித்திருந்தார் பிரியா ஆனந்த். மேலும் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க நடிகர் சத்யராஜிடமும் படக்குழு தரப்பில் இருந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

பல்வேறு விருதுகள்
இந்த பதாய் ஹோ படம் ஆர்ஜே பாலாஜியின் இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படமாகும். பதாய் ஹோ படம் வசூலை குவித்ததோடு மட்டுமின்றி தேசிய விருது உட்பட பல்வேறு மதிப்புமிக்க விருதுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











