ஆத்தாடி பாவாட காத்தாட .... காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட!

சென்னை : வணக்கம் சென்னைக்கு பிறகு மீண்டும் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து ப்ரியா ஆனந்த் நடித்துள்ள சுமோ திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாக உள்ளது.

பல தேசிய விருதுகளை அள்ளிய அந்தாதுன் தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட அதில் பிரசாந்த்-க்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் ஒப்பந்தமாகியுள்ளார்.

மூக்குத்தி அம்மனுக்கு பிறகு ஆர் ஜே பாலாஜி இயக்கி நடிக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள ப்ரியா ஆனந்த் இப்பொழுது காற்றில் ஆடைகள் பறக்க உஜாலா வண்ணத்தில் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

காமெடி திரைப்படத்தில்

காமெடி திரைப்படத்தில்

ஜெய்யின் வாமனன் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ப்ரியா ஆனந்த் தொடர்ந்து தெலுங்கில் எக்கச்சக்கமான வாய்ப்புகள் குவிய டோலிவுட்டின் குயினாக மாறினார். இந்தி,மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிற மொழிகளிலும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள இவர் வணக்கம் சென்னைக்கு பிறகு மீண்டும் மிர்ச்சி சிவா உடன் இணைந்து சுமோ என்ற காமெடி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஓடிடியில் வெளியாக

ஓடிடியில் வெளியாக

வணக்கம் சென்னையில் மிர்ச்சி சிவா மற்றும் ப்ரியா ஆனந்த் கெமிஸ்டரி மிக நன்றாக ஒர்க்கவுட் ஆகி இருக்க அதேபோல சுமோ படமும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்க நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்ட இப்படம் இப்பொழுது ஓடிடியில் வெளியாக தயாராகி கொண்டுள்ளது.

சூப்பர் ஹிட் த்ரில்லர்

சூப்பர் ஹிட் த்ரில்லர்

ஆயுஷ்மான் குரானாவின் மிரட்டலான நடிப்பில் ஹிந்தியில் வெளியான அந்தாதுன் பல தேசிய விருதுகளை அள்ளி ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. பாலிவுட்டில் கொண்டாடப்பட்ட இந்த சூப்பர் ஹிட் த்ரில்லர் படம் தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. ஆயுஷ்மான் குரானா நடித்த வேடத்தில் பிரசாந்த் நடிக்கிறார் ஜோடியாக ப்ரியா ஆனந்த் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகை சிம்ரன் இதில் வில்லியாக நடிப்பதால் தமிழிலும் இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட

காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட

சினிமாவில் காமெடியனாக அறிமுகம் ஆகி இப்பொழுது ஹீரோ, இயக்குனர் ,தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டுள்ள ஆர் ஜே பாலாஜி,ப்ரியா இணைந்து நடித்த எல்கேஜி பிளாக் பஸ்டர் வெற்றி பெற்ற நிலையில் இப்போது இருவரும் மீண்டும் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தையும் ஆர் ஜே பாலாஜி இயக்கி நடிக்க உள்ளார். நடிப்பு, கவர்ச்சி,நடனம் என அனைத்திலும் கைதேர்ந்தவரான ப்ரியா ஆனந்த் இப்பொழுது உஜாலா கலரில் பாவாடை சட்டையில் அடக்க முடியாத காற்று வீச அதில் பறக்கும் ஆடையுடன் ஆனந்தமாக போஸ் கொடுத்துள்ள செம க்யூட்டான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆத்தாடி பாவாட காத்தாட.. காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட என பாடல் பாடி வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X