கணவருடனான அன்சீன் ஃபோட்டோஸ்...முதல் முறையாக வெளியிட்ட பிரியா அட்லீ
சென்னை : ஆர்யா - நயன்தாரா நடித்த ராஜா ராணி படத்தை இயக்கி, கோலிவுட்டிற்கு டைரக்டராக அறிமுகமானவர் அட்லீ. இவர் நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முதல் படத்தை இயக்கிய ஓராண்டிற்கு பிறகே இவர்களின் திருமணம் நடைபெற்றது.
கோலிவுட்டின் மிக க்யூட்டான காதல் ஜோடிகளில் ஒன்று அட்லீ - பிரியா அட்லீ. சமூக வலைதளங்களில் அடிக்கடி தங்களின் க்யூட்டான பதிவுகளால் ஒருவர் மீது மற்றவருக்கு இருக்கும் காதலை அழகாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அன்சீன் ஃபோட்டோ வெளியிட்ட பிரியா
இந்நிலையில் தற்போது தனது கணவர் அட்லீ உடன் எடுத்துக் கொண்ட அன்சீன் ஃபோட்டோக்கள், சில ரகசியங்கள் ஆகியவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிரியா அட்லீ. ரசிகர்கள் சிலர் கேட்ட கேள்விக்கும் பதிலளித்துள்ளார் பிரியா அட்லீ.

எந்த தேதியில் சந்தித்தீர்கள்
ரசிகர் ஒருவர், அட்லீயை எந்த ஆண்டு, எந்த தேதியில் சந்தித்தீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த பிரியா அட்லீ, பிப்ரவரி 2009 என பதிலளித்துள்ளார். மேலும், எனது புன்னகைக்கு பின்னால் இருக்கும் ரகசியம் எனது கணவர் தான்.

பிரியாவுக்கு பிடித்த அட்லீ படம்
எனது கணவர் இயக்கியதிலேயே 2017 ல் இயக்கிய மெர்சல் படம் தான் எனக்கு மிகவும் பிடித்தது என்றார். அட்லீயுடன் எடுத்துக் கொண்ட முதல் ஃபோட்டோ, திருமணத்தின் போது எடுத்த ஃபோட்டோ, அட்லீயின் சிறு வயது ஃபோட்டோ போன்றவற்றையும் பிரியா பகிர்ந்துள்ளார்.

வரிசையாக ஹிட் கொடுத்த அட்லீ
அட்லீ, தனது முதல் படமான ராஜா ராணியை 2013 ல் இயக்கினார். 2014 ல் அட்லீ - பிரியா திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 2016 ல் விஜய்யை வைத்து தெறி, 2017 ல் மெர்சல், 2019 ல் பிகில் படத்தை இயக்கினார்.


Click it and Unblock the Notifications











