Priya Atlee: உங்களையும் உங்கள் மினியையும் தொடர்ந்து நேசிப்பேன்.. அட்லீ பிறந்தநாளில் பிரியா உருக்கம்!

சென்னை: இயக்குநர் அட்லீ -பிரியா தம்பதி இந்திய அளவில் மிகவும் பிரபலமானவர்களாக காணப்படுகின்றனர்.

அட்லீயின் முக்கியமான தருணங்களில் அவருடன் இருப்பதை பிரியா தொடர்ந்து செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் இவர்களது பதிவுகள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

அட்லீ -பிரியா தம்பதிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில், மீர் என்று பெயர் வைத்துள்ளனர். இதனிடையே இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை அட்லீ கொண்டாடி வருகிறார்.

Priya atlee wishes his husband and director Atlee on his birthday

அட்லீ பிறந்தநாளில் உருக்கமாக வாழ்த்துக்களை பகிர்ந்த பிரியா: இயக்குநர் அட்லீ தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் கூட்டணி வைத்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா கூட்டணியில் துவங்கிய இவரது திரையுலக பயணம், தற்போது ஜவானில் மெர்சல் காட்டி வருகிறது. முன்னதாக விஜய்யின் தெறி, மெர்சல் மற்றும் பிகில் படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை சாத்தியப்படுத்திய அட்லீ, தொடர்ந்து விஜய்யுடன் மீண்டும் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பிற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

சமீபத்தில் வெளியான ஜவான் படத்தின்மூலம் பாலிவுட்டிலும் தன்னுடைய என்ட்ரியை கொடுத்துள்ளார் அட்லீ. இந்தப் படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியா மணி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 900 கோடி ரூபாய் கலெக்ஷனை நெருங்கியுள்ளது. விரைவில் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் அட்லீ. ஜவான் படத்தை தொடர்ந்து, தன்னுடைய குடும்பத்தினருடன் 4 மாதங்கள் செலவழிக்க உள்ளதாக முன்னதாக பேட்டியொன்றில் அட்லீ தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய குடும்பத்தினருடன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் அட்லீயின் பிறந்தநாளையொட்டி அவரது மனைவி பிரியா அட்லீ, ட்விட்டரில் தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

Priya atlee wishes his husband and director Atlee on his birthday

அவர் தனது பதிவில் ஹாப்பி ஹாப்பி பர்த்டே மை பாப்பா என்று கூறியுள்ளார். மேலும் அனைத்திற்கும் அட்லீயை காதலிப்பதாகவும் தன்னுடைய வாழ்க்கையை அனைத்து வகையிலும் மகிழ்ச்சியாக்கியுள்ள அட்லீயை தான் அதிகமாக நேசிப்பதாகவும் பிரியா குறிப்பிட்டுள்ளார். தங்கள் இருவரின் அன்பை பொருத்திப் பார்ப்பதில் தன்னுடைய மகன் மிகவும் சிரமப்படுவான் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அதீத அன்பிற்கு மாற்றாக எப்போதும் அட்லீக்கு மகிழ்ச்சியை மட்டுமே தருவேன் என்றும் பிரியா கூறியுள்ளார்.

மேலும் அட்லீயையும் அவரது மினியான தங்களது குழந்தை மீரையும் அதிகமாக நேசிப்பதாகவும் கூறி தன்னுடைய பதிவை பிரியா முடித்துள்ளார். மேலும் இந்த போஸ்ட்டில் தானும் அட்லீ மற்றும் தங்களின் குழந்தை மீர் இருக்கும்படியான க்யூட்டான புகைப்படத்தையும் பிரியா பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் பிரியா, தொடர்ந்து தங்களது குடும்ப நிகழ்வுகளின் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X