Priya Bhavani Shankar: விஜய்யை விடாமல் துரத்தும் பிரியா பவானி சங்கர்... ஓ! எல்லாம் அதுக்காக தானா..?

சென்னை: சீரியலில் தொடங்கி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் பிரியா பவானி சங்கர்.

மேயாத மான் படத்தில் நாயகியாக அறிமுகமான பிரியா பவானி சங்கர், தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இறுதியாக அவரது நடிப்பில் பத்து தல, ருத்ரன் ஆகிய படங்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் விஜய்க்கு எப்படியாவது ஜோடியாக வேண்டும் என அவரை விடாமல் துரத்தி வருகிறாராம் பிரியா பவானி சங்கர்.

 Priya Bhavani Shankar: Actress Priya Bhavani Shankar team up with Vijay in Thalapathy 68 film

விஜய்யை விடாமல் துரத்தும் பிரியா பவானி சங்கர்

செய்தி வாசிப்பாளர், சின்ன திரை, சீரியல் என வலம் வந்த பிரியா பவானி சங்கர், தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார். மேயாத மான் படத்தில் நாயகியாக நடித்திருந்த பிரியா பவானி சங்கர், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், எஸ்ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜய்யுடன் யானை ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

அதேபோல் தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்திலும், ஜெயம் ரவி ஜோடியாக அகிலன், சிம்புவுடன் பத்து தல ஆகிய படங்களில் நடித்து டாப் கியரில் சென்றுக் கொண்டிருக்கிறார். இந்தியன் 2 படத்திலும் நடித்து வரும் பிரியா பவானி சங்கர், எப்படியாவது விஜய்க்கு ஜோடியாகிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறாராம். ஆனால், இதுவரை அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.

ஆனால், தளபதி 68 படத்தில் எப்படியாவது விஜய்யை வளைத்துப் போட்டுவிட வேண்டும் என பிரியா பவானி பிளான் செய்துள்ளாராம். விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

 Priya Bhavani Shankar: Actress Priya Bhavani Shankar team up with Vijay in Thalapathy 68 film

ஏஜிஎஸ் தயாரிக்கும் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு லியோ ரிலீஸுக்குப் பின்னர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் பொலிட்டிக்கல் அல்லது சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 68 படத்தில் விஜய் ஜோடியாக க்ருத்தி ஷெட்டி நடிக்கலாம் என்ற தகவலும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதனால், பிரியா பவானி சங்கர் இப்பவே உஷாராகிவிட்டாராம்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்னர் வெளியான கஸ்டடி படத்தில் க்ருத்தி ஷெட்டி தான் நாயகியாக நடித்திருந்தார். அதனால், தளபதி 68 படத்திலும் அவரே விஜய் ஜோடியாக நடிக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால், தற்போது பிரியா பவானி சங்கர் தான் விஜய் ஜோடியாக நடிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X