Don't Miss!
- News ஜெய் ஸ்ரீராம் போலோ.. "பிஸ்னஸ் மேன்" கையை தூக்கிய கேப்பில்! ரூ.36000 அபேஸ்! பாஜக பிரச்சாரத்தில் திக்
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆம்லேட் போட்ட அக்ஷரா... பிரியா பவானி சங்கர், ஹரிஷ் பிக் பாஸ் வீட்டில் என்ன பண்ணாங்க தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஓ மணப் பெண்ணே நடிகர்களான ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் வைத்த போட்டி செம சுவாரஸ்யமாக இருந்தது.
Recommended Video
பிக் பாஸ் வீட்டுக்கு பிரியா பவானி சங்கர் வரப் போகிறார் என தகவல்கள் சில நாட்களுக்கு முன்பே கசிந்து விட்டது.
ஆனால், இந்த ஆண்டும் பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் ஜூம் கால் வழியாகத் தான் போட்டியாளர்களை சந்திப்பார்கள் என்பது தெளிவாகி உள்ளது.
பிக் பாஸ் வீட்டில் பிரியா, ஹரிஷ்
பிக் பாஸ் வீட்டிற்குள் பிரியா பவானி சங்கர் மற்றும் ஹரிஷ் கல்யாண் வராங்க சொன்னாங்களே எங்க இதுவரை இருவரையும் ஆளே காணோமே என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்றைய எபிசோடில் அந்த சர்ப்ரைஸ் காத்திருந்தது. பிரியா மற்றும் ஹரிஷ் போட்டியாளர்கள் மத்தியில் தோன்றி பேசினர்.
ஓ மணப் பெண்ணே டிரைலர்
வழக்கம் போல இந்த ஆண்டும் புதிய படங்களை பிக் பாஸ் வீட்டில் புரமோஷன் பண்ணும் பணி ஓ மணப் பெண்ணே படத்தில் இருந்து ஆரம்பமாகி உள்ளது. பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஓ மணப் பெண்ணே டிரைலர் போட்டு காண்பிக்கப்பட்டது. ராஜு பாய் உள்ளிட்ட போட்டியாளர்கள் டிரைலரை பார்த்து ரசித்தனர்.
சாப்பிட குடுங்க
ஃபுட் டிரக் நடத்தும் இருவர் பற்றிய கதையாக ஓ மணப்பெண்ணே உருவாகி இருப்பதை பார்த்து பிரியங்காவுக்கு மறுபடியும் வெயிட்டாக பசிக்க ஆரம்பித்தது. பிரியா பவானி சங்கர் மற்றும் ஹரிஷ் கல்யாணிடமே நேரடியாக சாப்பிட ஏதாவது கொடுப்பீங்களா என வெட்கமே இல்லாமல் கேட்டு விட்டார்.
ஆம்லெட் போட்டி
ஜூம் கால் வழியாக போட்டியாளர்களை சந்தித்த முன்னாள் விஜய் டிவி நடிகை பிரியா பவானி சங்கர் மற்றும் பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர் ஹரிஷ் கல்யாண் இருவருமே பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஆம்லெட் போட்டியை நடத்தினர். அக்ஷரா மற்றும் நிரூப் அந்த போட்டியில் கலந்து கொள்ள அறிவுறுத்தினர்.
சண்டை போட்ட பிரியங்கா
பிடித்தமானவருக்கு ஆம்லெட்டை கொடுக்க சொல்லி நடத்தப்பட்ட போட்டியில் நிரூப் தான் போட்ட ஆம்லெட்டை பசிக்குதுன்னு சொன்ன பிரியங்காவுக்கு கொடுப்பார் என பார்த்தால் அதற்கு மாறாக இமான் அண்ணாச்சிக்கு கொடுத்ததை பார்த்த பிரியங்கா நிரூப்பிடம் சண்டையே போட்டு விட்டார்.
அக்ஷரா ஆம்லெட்
இன்னொரு புறம் அக்ஷரா ரெட்டி போட்ட ஆம்லெட்டை ராஜு பாய் என அழைத்து ராஜுவுக்கு கொடுக்க அதில் ஒரு பீஸை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவர்களுக்கு கொடுக்க சொல்லி விட்டு அங்கே இருந்து நகர்ந்து சென்றார் ராஜு ஜெயமோகன்.
யாருக்கு வெற்றி
அந்த போட்டியில் யார் ஜெயித்தார் என எதுவுமே சொல்லாமல் அதன் பிறகு பிரியா பவானி சங்கர் மற்றும் ஹரிஷ் கல்யாண் டாட்டா காட்டி விட்டு கிளம்ப அப்படியே அந்த சீனை பிக் பாஸ் எடிட்டர் மென்னு முழுங்கி விட்டார். பிரியங்கா வெளியே நிரூப்பிடம் சண்டை போட்டதை மட்டுமே காட்டி அந்த சீனை முடித்து விட்டனர்.