செட்டாகாத ஜோடியாம்.. பிரியா பவானி சங்கர் – ஹரிஷ் கல்யாணின் ’ஓ மணப்பெண்ணே’ மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

சென்னை: நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள 'ஓ மணப்பெண்ணே' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கும் நடிகை பிரியா பவானி சங்கருக்கும் தொடர்ந்து பல படங்கள் வரிசைக் கட்டி காத்திருக்கின்றன.

இந்நிலையில், இருவரும் இணைந்து நடித்துள்ள 'ஓ மணப்பெண்ணே' படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று ரிலீஸ்

இன்று ரிலீஸ்

நடிகை பிரியா பவானி சங்கர் கைவசம் ஏகப்பட்ட படங்கள் உள்ளன. நடிகர் ஜீவா மற்றும் அருள்நிதியுடன் இணைந்து நடித்த களத்தில் சந்திப்போம் படம் இன்று வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

ஏகப்பட்ட படங்கள்

ஏகப்பட்ட படங்கள்

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த நடிகை பிரியா பவானி சங்கர் எஸ்.ஜே. சூர்யாவுடன் பொம்மை, அதர்வாவுடன் குருதி ஆட்டம், சிம்பு தேவனின் கசட தபற, சிம்புவின் பத்து தல, இந்தியன் 2 மற்றும் ஹரிஷ் கல்யாண் உடன் ஓ மணப்பெண்ணே என ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

ஓ மணப்பெண்ணே

ஓ மணப்பெண்ணே

அறிமுக இயக்குநர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ஓ மணப்பெண்ணே படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது. சமையல்கார மாப்பிள்ளைக்கும் எம்.பி.ஏ மாணவிக்கும் எப்படி திருமணம் செட் ஆகிறது என்பது தான் கதை.

எபிக் மிஸ்மேட்ச்

எபிக் மிஸ்மேட்ச்

பெலி சூப்புலுவின் நேரடி அர்த்தமான மாலை சூடும் வேலை என்கிற டைட்டிலையே முதலில் யோசித்ததாகவும், பின்னர் இளைஞர்களை கவரும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக விடிவி பட பாடலான ஓ மணப்பெண்ணே என்கிற டைட்டிலை வைத்துள்ளதாகவும் இயக்குநர் கூறியுள்ளார். செட்டாகாத இருவருக்கும் இடையே ஏற்படும் காதல் கதை தான் இந்த படம்.

பெலி சூப்புலு

பெலி சூப்புலு

இயக்குநர் தருண் பாஸ்கர் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான பெலி சூப்புலுவின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த படம். விஜயதேவரகொண்டா மற்றும் ரிது வர்மா நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான இந்த படம் இருவருக்குமே மிகப்பெரிய சினிமா கதவை திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

பத்தாண்டு கால காதல்

பத்தாண்டு கால காதல்

சமீபத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் சினிமாவுக்குள் நுழையும் முன்பிருந்தே கடந்த பத்தாண்டுகளாக காதலித்து வரும் தனது காதலரான ராஜ்வேல் என்பவரது புகைப்படத்தை வெளியிட்டு, அவரது பிறந்தநாளுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்து, பிரியாவையே நினைத்து ஏங்கும் ஏகப்பட்ட இளைஞர்களை ரொம்பவே வெறுப்பேற்றியது குறிப்பிடத்தக்கது. பிரியா நடிப்பில் உருவாகி வரும் எல்லா படங்களும் வெற்றி பெற அவரது ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X