ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் பிரியா பவானி ஷங்கர்... அடுத்தடுத்த படங்களால் ஹாப்பி

சென்னை : மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பிரியா பவானி ஷங்கர்.

இவர் தற்போது கோலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார்.

ஜெயம் ரவி அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தில் பிரியா பவானி ஷங்கர் கமிட் ஆகியுள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

தொலைக்காட்சியின் மூலம் தன்னை நடிகையாக அறிமுகப்படுத்திக் கொண்டவர் பிரியா பவானி ஷங்கர். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதையடுத்து சினிமாவில் மேயாத மான், மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம் என அடுத்தடுத்து படங்களில் நடித்துள்ளார்.

விருப்பத்திற்குரிய நடிகை

விருப்பத்திற்குரிய நடிகை

இந்த படங்களை அடுத்து அவர் தற்போது மிகவும் பிசியான நடிகையாக மாறியுள்ளார். அடுத்தடுத்த படங்களில் அவர் நடித்து வருகிறார். மேலும் தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். பல நடிகர்களின் மற்றும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையாகவும் மாறியுள்ளார்.

நீளும் படங்களின் பட்டியல்

நீளும் படங்களின் பட்டியல்

இவருக்கு மான்ஸ்டர் மற்றும் கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்கள் சிறப்பான பெயரை பெற்றுத் தந்தன. தற்போது கசட தபற, குருதியாட்டம் போன்ற படங்கள் இவரது நடிப்பில் உருவாகியுள்ளன. மேலும் பொம்மை, ஹாஸ்டல், இயக்குநர் ஹரி இயக்கத்தில் ஒரு படம் என இவரது பட்டியல் நீளுகிறது.

பிரியா ஹீரோயின்

பிரியா ஹீரோயின்

இந்நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள படத்தில் தற்போது கமிட் ஆகியுள்ளார் பிரியா பவானி ஷங்கர். இந்த படத்தின் சூட்டிங் ஆகஸ்ட்டில் துவங்கவுள்ளது. படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த படத்தில் ஜெயம் ரவி

அடுத்த படத்தில் ஜெயம் ரவி

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. இதையடுத்து தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார் ஜெயம் ரவி. இவரது பூலோகம் படத்தை சிறப்பாக இயக்கிய கல்யாண் தற்போது இவரது இந்த படத்தை இயக்கவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X