தோழியின் திருமணத்தில் காதலருடன் பிரியா பவானி சங்கர் செய்த சேட்டை.. டிரெண்டாகும் பிக்ஸ்!
சென்னை: தனது தோழியின் திருமணத்துக்கு காதலருடன் சென்ற நடிகை பிரியா பவானி சங்கர் அந்த திருமணத்தில் ஜாலியாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
செய்திவாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரை நடிகையாக மாறினார். அதன் பின்னர் மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அவர் தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பே ராஜ்வேல் ராஜ் என்பவரை காதலித்து வரும் நிலையில், தனது தோழியின் திருமணத்துக்கு காதலருடன் சென்றுள்ளார்.
அஜர்பைஜானில் என்ஜாய்: கார்த்தி உடன் கடைக்குட்டி சிங்கம், எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர், பொம்மை, ஜெயம் ரவியுடன் அகிலன், தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் என பல படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் என்றும் அஜர்பைஜானில் சமீபத்தில் தனது காதலருடன் டூர் அடித்து என்ஜாய் பண்ணியதாகவும் தகவல்கள் வெளியாகின.

தோழியின் திருமணம்: இந்நிலையில், தற்போது தோழியின் திருமணத்தில் கலந்து கொண்ட பிரியா பவானி சங்கர் தனது காதலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளின் பார்வையை தன் பக்கம் திருப்பி உள்ளார். யாரு கல்யாண பொண்ணு என்றே தெரியாத அளவுக்கு செம க்யூட்டாக சேலையில் பிரியா பவானி போஸ் கொடுத்த புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

நாங்கதான் ஜாலியா இருந்தோம்: அழகான மணப்பெண்ணே காவ்யா, இது உன்னோட திருமணம் தான் என்றாலும், உன்னை விட நாங்க தான் ரொம்பவே ஜாலியா இருந்தோம் என திருமணத்தில் தனது காதலருடன் செய்த சேட்டைகளை எல்லாம் போட்டோக்களாக வெளியிட்டு போஸ்ட் போட்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.

தொடரும் தோல்வி: இந்த ஆண்டு பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான 3 படங்களும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. ஜெயம் ரவியுடன் அகிலன், ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன் மற்றும் எஸ்.ஜே. சூர்யாவுடன் பொம்மை படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், அடுத்த ஆண்டு அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த நிலையை பிரியா பவானி சங்கர் மாற்றுவார் என்றே தெரிகிறது. பல ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், உங்களுக்கு எப்போ திருமணம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











