கிடைக்கறது பிடிக்கும் அவ்ளோதான்... இம்ப்ரஸ்ட் பிரியா பவானி ஷங்கர்
சென்னை: எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர்.. முக்கியமாக அந்த எலி நடித்து உருவான படம் மான்ஸ்டர்
குடும்பத்தோட தியேட்டருக்கு போயி ரசிச்சு பார்க்க வேண்டிய நல்ல படம் இது என்கிற கருத்து அனைத்து பக்கத்தில் இருந்தும் வந்துகொண்டு இருக்கிறது.

முதலில் செய்தி வாசிப்பாளரா இருந்த பிரியா பவானி சங்கர் அடுத்து விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.
ஆட்சிக்கு ஆபத்து?.. சரிவை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. வார்னிங் நோட் அனுப்பும் வல்லுநர்கள்!
அடுத்து வெள்ளித்திரைக்கும் மேயாத மான் படத்தின் மூலம் என்ட்ரி குடுத்தார். இப்போது இவர் எஸ்.ஜே .சூர்யாவுடன் சேர்ந்து நடித்து தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் மான்ஸ்டர்.
எஸ்.ஜே.சூர்யா படத்தை குடும்பத்தோடு பாரக்க முடியாது என்ற கம்பளைண்ட் இருக்கு. இந்த எண்ணங்களை உடைத்து எறிவது போல மான்ஸ்டர் படம் இருக்கு. குடும்பம் குடும்பமாக மக்கள் தியேட்டர்களுக்கு பாய்ந்து கொண்டுள்ளனர்.
இந்த படத்தை பற்றிய ரசிகர் ஒருவரின் கமெண்டை பிரியா பவானி ஷங்கர், தன்னுடைய ட்வீட்டர் வலைத் தளத்தில் ஷேர் செய்துள்ளார் மகிழ்வாக..
அதாவது கனகவேல் என்கிறவர் போட்டு இருக்கும் ட்வீட்... எனக்கு ஏன் படம் ரொம்ப பிடிச்சுதுன்னா, படம் தொடங்கி கொஞ்ச நேரத்துல ஒரு டயலாக் வரும்...
'பிடிக்கும் பிடிக்காதுன்னு பார்த்து வளர்ந்த பையன் இல்லைங்க நான்.. கிடைக்கறது பிடிக்கும் அவ்ளோதான்..." இதுதான். இதைத்தான் பிரியா தன் ட்வீட்டர் வலைத்தளத்தில் ஷேர் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











