தனுஷ் வெளியிட்ட பொம்மை ஃபர்ஸ்ட் லுக்.. வருத்தத்தில் பிரியா பவானி சங்கர் ரசிகர்கள்!

சென்னை: ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள 'பொம்மை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் 'பொம்மை' படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்.

பொம்மை ஃபர்ஸ்ட் லுக்கில், பெண் பொம்மையுடன் எஸ்.ஜே. சூர்யா இருக்கும் கூலான புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

ஆனால், இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரியா பவானி சங்கர் புகைப்படம் ஃபர்ஸ்ட் லுக்கில் இல்லாததால், பிரியா ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

பொம்மை ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் தனுஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது பொம்மை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். தனுஷ் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள், எஸ்.ஜே. சூர்யா ரசிகர்கள் மற்றும் யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் என பலரும் பொம்மை ஃபர்ஸ்ட் லுக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

விஜய் தம்பி

சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய எஸ்.ஜே. சூர்யா, நடிகர் தனுஷை விஜய் தம்பி என புகழ்ந்துள்ளார். விஜய்க்கு அடுத்த இடத்தில் நடிகர் தனுஷ் சிறப்பான நடிப்பையும், பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன்களையும் நிகழ்த்தி வருவதாகவும் எஸ்.ஜே. சூர்யா கூறினார்.

அடுத்த மான்ஸ்டர்

வாலி, குஷி என தல, தளபதிக்கு இரு வெற்றிப் படங்களை கொடுத்த எஸ்.ஜே. சூர்யா, பல படங்களில் ஹீரோவாக நடித்தாலும், இந்த ஆண்டு வெளியான மான்ஸ்டர் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளது. பொம்மை படம் அடுத்த மான்ஸ்டராக வரவேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

பொம்மையுடன் காதல்

எஸ்.ஜே. சூர்யா ஒரு மேனிக்யூன் பொம்மையை காதலித்தால் என்ன ஆகும் என்பதை அடிப்படையாக வைத்து பொம்மை படம் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அவருக்காக கண்டிப்பா பார்க்கலாம்

ஃபர்ஸ்ட் லுக் ரொம்ப வித்தியாசமா இருக்கு.. தலைவன் எஸ்.ஜே. சூர்யா நடிப்புக்காக கண்டிப்பா பொம்மை படத்தை பார்க்கலாம். ரிலீசுக்கு வெயிட்டிங் என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

என்னடா பண்ணி வச்சிருக்கீங்க

பொம்மை பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பிரியா பவானி சங்கரை பொம்மையாக மாற்றியுள்ளார்கள் என கிண்டலடிக்கும் தொனியில் இந்த ரசிகர், என்னடா பண்ணி வச்சிருக்கீங்க பிரியா பவானி சங்கரை என கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரியா பவானி சங்கர் எங்கே?

மான்ஸ்டர் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை படத்தில் மீண்டும் ஜோடி போட்டு நடித்துள்ளார் பிரியா பவானி சங்கர். இன்று பிரியாவின் பிறந்தநாள் கொண்டாடி வரும் நிலையில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவர் இல்லாதது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அட்லீஸ்ட் ஹேப்பி பர்த்டே பிரியா பவானி சங்கர் என தனியாக ஒரு போஸ்டரையாவது பொம்மை படக்குழு வெளியிடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X