Priya Bhavani Shankar - சொந்த ஹோட்டல் பிரியாணி எப்படி இருக்கு?.. உண்மையை சொன்ன ப்ரியா பவானி ஷங்கர்

சென்னை: Priya Bhavani Shankar (ப்ரியா பவானி ஷங்கர்) தனது சொந்த ஹோட்டலில் செய்த பிரியாணி எப்படி இருக்கிறது என்பது குறித்து ப்ரியா பவானி ஷங்கர் ஓபனாக பேசியிருக்கிறார். அதுதொடர்பான பதிவு இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகியுள்ளது.

செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் ப்ரியா பவானி ஷங்கர். அவர் செய்தி வாசிப்பாளராக இருந்தபோதே அவருக்கென்று ரசிகர்கள் உருவாகினர். அதில் கிடைத்த பிரபல்யத்தை தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் நடிகையாக களமிறங்கினார். தொடர்ந்து மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அவர் அறிமுகமானார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதுமட்டுமின்றி முதல் படத்திலேயே தனது நடிப்பில் அதகளம் செய்திருந்தார் ப்ரியா பவானி ஷங்கர்.

Priya Bhavani Shankar Opens Up About Liams Diner Biryani

முன்னணி நடிகை: தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ஜெயம் ரவி, சிம்பு என முன்னணி நடிகர்களின் படத்திலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் அகிலன், பத்து தல, ருத்ரன் ஆகிய படங்கள் வெளியாகின. மூன்று படங்களுக்கும் சுமாரான வரவேற்பு கிடைத்தாலும் ப்ரியா பவானி ஷங்கருக்கு சூப்பரான வரவேற்பை ரசிகர்கள் கொடுத்திருக்கின்றனர்.

பல படங்கள் ஓகே ஆனால் ஒரு ஹிட்?: ப்ரியா பவானி ஷங்கர் அடுத்ததாக இந்தியன் 2, ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் பொம்மை உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார். பல படங்களில் அவர் நடித்தாலும் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு ஹிட்கூட மேயாத மான் படத்துக்கு பிறகு அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் ப்ரியா பவானி ஷங்கர் ராசியில்லாத நடிகை என்ற பெயரையும் எடுக்க ஆரம்பித்திருக்கிறார். இந்தப் பெயரை இந்தியன் 2 மாற்றிவிடும் என்ற நம்பிக்கையில் அவர் இருக்கிறார்.

சொந்த தொழில்: சினிமாவில் சம்பாதிப்பவர்கள் பெரும்பாலும் தனி தொழில் தொடங்குவது காலங்காலமாக நடந்துவரும் ஒன்றுதான். அந்த வகையில் அவர் லியாம்ஸ் டைனர் (Liam's Diner)என்ற ஹோட்டலை சமீபத்தில் சென்னையில் திறந்தார். புதிய தொழில் தொடங்கிய அவருக்கு ரசிகர்கள் முதல் செலிபிரிட்டிகள்வரை வாழ்த்துகள் தெரிவித்தனர். அந்த ஹோட்டலை அவர் தனது காதலருக்காக தொடங்கியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Priya Bhavani Shankar Opens Up About Liams Diner Biryani

பிரியாணி சாப்பிட்ட ப்ரியா பவானி ஷங்கர்?: இந்நிலையில் ரமலான் பண்டிகை நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அவர் தனது ஹோட்டலுக்கு சென்று அங்கு செய்த பிரியாணியை சாப்பிட்டார். அதனையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சொந்த ஹோட்டலில் செய்யப்பட்ட பிரியாணி எப்படி இருக்கிறது என்பது குறித்து பதிவிட்டிருக்கிறார்.

எப்படி இருக்கிறது பிரியாணி: இதுகுறித்து அவர் செய்திருக்கும் பதிவில், "எங்களது லியாம்ஸ் டைனர் ரெஸ்டாரண்ட்டில் ரமலானை கழித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு நாளும் முன்னேறும் எங்களது இளம் டீமை நினைத்து பெருமையாக இருக்கீறது. அங்கு நான் சாப்பிட்ட பிரியாணி மற்றும் தால்ச்சாவின் ருசி என்னை ரொம்பவே கவர்ந்துவிட்டது. குறிப்பாக அங்கு கிடைக்கு பான் ஷேக் எப்போழுதும் என்னுடைய ஃபேவரைட் சியர்ஸ்" என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு இன்ஸ்டாகிராமில் தற்போது ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X