அருவி அழகா.. பிரியா பவானி சங்கர் அழகா.. இரண்டையும் ரசிக்கலாம் வாங்க.. வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்!

சென்னை: நடிகை பிரியா பவானி சங்கர் போட்டோ போட்டாலே அது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவது வழக்கம்.

அதிலும், இப்படி கூடுதல் அழகாக அருவி அருகே அமர்ந்திருக்கும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை அசால்ட்டாக கவர்ந்திழுத்து வருகிறார்.

ஏகப்பட்ட தமிழ்ப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் பிரியா பவானி சங்கருக்கு டோலிவுட் வாய்ப்புகளும் கதவைத் தட்டி வருகின்றன.

அருவியுடன் அழகு போட்டி

அருவியுடன் அழகு போட்டி

மஞ்சள் நிற டிசர்ட்டும் நீல நிற பேன்ட்டும் அணிந்து கொண்டு அருவி அருகே எடுத்த அழகான புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர். அருவி அழகா பிரியா பவானி சங்கர் அழகா என கமெண்ட் பக்கத்தில் ரசிகர்கள் பட்டி மன்றமே நடத்தி வருகின்றனர்.

க்யூட்னஸ் ஓவர்லோட்

க்யூட்னஸ் ஓவர்லோட்

பிரியா பவானி சங்கரின் இந்த இயற்கை அழகு போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் தங்கமே என்றும், அழகு குட்டி செல்லம் என்றும், க்யூட்னஸ் ஓவர்லோட் என்றும் ஏகப்பட்ட கமெண்ட்களை போட்டு வர்ணித்து தள்ளி வருகின்றனர். லைக்குகளும் எக்கச்சக்கமாக வந்து விழுந்து கொண்டே இருக்கிறது.

ஹார்ட்டீன் அம்புகள்

ஹார்ட்டீன் அம்புகள்

நடிகர் விஜய் மாஸ்டர் படத்தில் வில்லில் இருந்து அம்பு விடும் புகைப்படத்தை எடிட் செய்து ஹார்ட்டீன் அம்புகளாக நடிகை பிரியா பவானி சங்கரை நோக்கி அவரது ரசிகர்கள் விட்டு வருகின்றனர். இது எந்த இடம் என்றும், பார்த்து பத்திரமா டிராவல் பண்ணுங்க என்றும் அக்கறையுடன் சில கமெண்ட்டுகளும் வந்து விழுந்துள்ளன.

கோலிவுட்டில் கைவசம்

கோலிவுட்டில் கைவசம்

ஜீவா, அருள்நிதியுடன் இணைந்து நடித்த களத்தில் சந்திப்போம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. மேலும், எஸ்.ஜே. சூர்யாவுடன் நடித்துள்ள பொம்மை, ஹரிஷ் கல்யாணுடன் ஓ மணப்பெண்ணே, அதர்வாவுடன் குருதி ஆட்டம், சிம்பு தேவனின் கசட தபற, சிம்புவின் பத்து தல என ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

டோலிவுட் பயணம்

டோலிவுட் பயணம்

இந்நிலையில், டோலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்கவும் நடிகை பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகி உள்ளார். யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அனில் இயக்கத்தில் நடிகர் சந்தோஷ் சோபனுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகி உள்ளார். மேலும், ஏகப்பட்ட வாய்ப்புகளும் அங்கேயும் கதவை தட்டி வருகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X