சேர்க்கை சரியில்லையாம்.. தனது காதலருடன் பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் மீண்டும் மோதல்..!

By

சென்னை: நடிகை பிரியா பவானி சங்கருக்கும் அவர் காதலருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. சேர்க்கை சரியில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

சேனல் ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர், கல்யாணம் முதல் காதல்வரை என்ற டி.வி.தொடரில் நடித்தார்.

இது அவரை பிரபலமாக்கியது. அடுத்து சினிமா வாய்ப்புகள் வந்தன. மேயாத மான் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

கமல்ஹாசனின் இந்தியன் 2

கமல்ஹாசனின் இந்தியன் 2

அடுத்து, பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடித்தார். இதில் அவர் நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தது. எஸ்.ஏ.சூர்யாவின் மான்ஸ்டர் படத்திலும் அவர் நடிப்பு பேசப்பட்டது. அடுத்து அருண் விஜய்யின் மாஃபியா படத்தில் நடித்தார். இப்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2, ராதாமோகனின் பொம்மை உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

காதலர் ராஜ்வேல்

காதலர் ராஜ்வேல்

இவர் பற்றி காதல் கிசுகிசுகள் அடிக்கடி வெளியாகி வந்தன. அதை மறுத்து வந்த பிரியா, கடந்த சில மாதங்களுக்கு முன் தனது காதலர் ராஜ்வேலின் புகைப்படத்தை பதிவிட்டு, காதலை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். கல்லூரி காலத்தில் இருந்தே அவரைக் காதலித்து வருவதாகக் கூறி, தன்னைப் பற்றி வந்த கிசு கிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

காதலரை பிரிந்ததாக

காதலரை பிரிந்ததாக

பிறகு, தனது இன்ஸ்டாகிராமில் 'மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும், வலித்து மரத்து அடங்கிய பின் வரும் தெளிவு, அழகு' என்று கூறியிருந்தார். இதை வைத்து அவர் காதலரை பிரிந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாயின. இதை மறுத்திருந்தார் அவர். இந்நிலையில் இப்போது அவர்களுக்கு மீண்டும் செல்ல சண்டை ஏற்பட்டுள்ளது.

சமாதானம் ஆகிவிடலாம்

சமாதானம் ஆகிவிடலாம்

இதை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் பிரியா பவானி சங்கர். 'நாம் ஒருவருடன் கோபமாக இருந்தாலும், அவரோடுதான் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால், அவர் போட்டோ எடுப்பதன் மூலம் சமாதானம் ஆகிவிடலாம் என நினைக்கிறார் என்று கூறியுள்ள பிரியா பவானி சங்கர், #readyToBurst என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி இருக்கிறார்.

சேர்க்கை சரியில்ல

சேர்க்கை சரியில்ல

இதையடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளர் பாவனா பாலகிருஷ்ணன், பிரியா பவானியின் காதலர் ராஜவேலுக்கு டேக் செய்து, நல்லா பண்ணுனீங்க என்று கூறியுள்ளார். வாசுகி பாஸ்கர், என்னவொரு கோபம் என்று கூற, சேர்க்கை சரியில்ல என்று தெரிவித்திருக்கிறார், பிரியா பவானி சங்கர். சில ரசிகர்கள், என்னங்க திரும்பவும் சண்டையா? என்று கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X