யக்கோவ், ஸ்லிம்மாதானே இருக்கீங்க.. பிறகு ஏன் ஜிம்மு? பிரியா பவானியிடம் பாசமாகக் கேட்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: பிரியா பவானி சங்கர், தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளரான பிரியா பவானி சங்கர், கல்யாணம் முதல் காதல்வரை என்ற டி.வி.தொடரில் நடித்தார்.

இது அவரை பிரபலமாக்கியது. அடுத்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தன. மேயாத மான் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

கடைக்குட்டி சிங்கம்

கடைக்குட்டி சிங்கம்

அடுத்து, பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடித்தார். இதில் அவர் நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தது. எஸ்.ஏ.சூர்யாவின் மான்ஸ்டர் படத்திலும் அவர் நடிப்பு பேசப்பட்டது. அடுத்து அருண் விஜய்யின் மாஃபியா படத்தில் நடித்தார்.

ஓ மணப்பெண்ணே

ஓ மணப்பெண்ணே

இப்போது ராதா மோகனின் பொம்மை, குறத்தி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, களத்தில் சந்திப்போம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்து ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2, கசடதபற, வான் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். டைம் என்ன பாஸ் என்ற வெப் சீரிஸிலும் நடித்திருந்தார்.

காதலர் புகைப்படம்

காதலர் புகைப்படம்

இவர் பற்றி காதல் கிசுகிசுகள் அடிக்கடி வெளியாகி வந்தன. அதை மறுத்து வந்த பிரியா, கடந்த சில மாதங்களுக்கு முன் தனது காதலர் ராஜ்வேலின் புகைப்படத்தை பதிவிட்டு, காதலை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். கல்லூரி காலத்தில் இருந்தே அவரைக் காதலித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

முற்றுப்புள்ளி வைத்தார்

முற்றுப்புள்ளி வைத்தார்

இதையடுத்து தன்னைப் பற்றி வந்த கிசு கிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இன்ஸ்டாவில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர், கடந்த சில மாதத்துக்கு முன் துபாயில் நீச்சல் குளத்தில் இருந்தவாறு எடுத்த புகைப்படங்கள் வைரலாயின. பல நெட்டிசன்கள் அதை லைக் செய்திருந்தனர்.

லட்சகணக்கான லைக்ஸ்

லட்சகணக்கான லைக்ஸ்

இந்நிலையில், ஜிம்மில் உடற்பயிற்சியின் போது அவர் எடுத்துள்ள புகைப்படங்களை இன்று வெளியிட்டுள்ளார். சிவப்பு நிற உடையில் அவர் வெளியிட்டுள்ள இந்த போட்டோஸும் லட்சகணக்கான லைக்ஸ்களை குவித்திருக்கிறது. நூற்றுக்கணக்கான ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Recommended Video

GENTLEMAN படத்துக்கு ஷங்கர் வாங்குன 4 DIGIT CHECK | REWIND RAJA EPISODE-18 | FILMIBEAT TAMIL
றெக்கை இருந்தா

றெக்கை இருந்தா

இன்னும் சிலர் அவரை அப்படி இப்படி வர்ணித்துள்ளனர். ஒரு நெட்டிசன் கொஞ்சம் ஒவராகப் போய், றெக்கை மட்டும் இருந்தா தேவதைதான் என்று கூறியுள்ளார். இன்னொருவர் நல்லா சாப்பிடுங்க, இளைச்சு போயி இருக்கீங்க என்று அக்கறையாக கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X