செம ஸ்டைலில் பிரியா பவானி சங்கர்.. லட்சம் பூப்பறிச்சு, மிச்சம் தேன்தெளிச்சு.. வர்ணிக்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

கல்யாணம் முதல் காதல்வரை என்ற டி.வி.தொடர் மூலம் நடிகையானவர் பிரியா பவானி சங்கர்.

அதற்கு முன், நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தார். பின்னர் மேயாத மான் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

இதில் கவனிக்கப்பட்டதும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடித்தார். இதில் அவர் நடிப்புக்கு நல்ல வரவேற்பு. எஸ்.ஏ.சூர்யாவின் மான்ஸ்டர் படத்திலும் அவர் நடிப்பு பேசப்பட்டது. அடுத்து அருண் விஜய்யின் மாஃபியா படத்தில் நடித்தார்.

காதல் கிசுகிசு

காதல் கிசுகிசு

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2, ராதாமோகனின் பொம்மை உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இவர் பற்றி காதல் கிசுகிசுகள் அடிக்கடி வெளியாகின. அதை மறுத்து வந்த பிரியா, பின்னர், தனது காதலர் ராஜ்வேலின் புகைப்படத்தை பதிவிட்டு, காதலை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.

குளத்தில் குளிக்கும்

குளத்தில் குளிக்கும்

கடந்த சில நாட்களுக்கு முன், துபாய் சென்றிருந்த நடிகை பிரியா பவானி, அங்கு நீச்சல் குளத்தில் குளிப்பது போன்ற புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார். லட்சக்கணக்கான லைக்ஸ்களை அள்ளிய அந்த புகைப்படங்கள் வைரலாகிறன. பல ரசிகர்கள் கண்டபடி கமென்ட்ஸ்களை பதிவு செய்திருந்தனர்.

உலகுக்கு வர்ணம்

உலகுக்கு வர்ணம்

இந்நிலையில், இப்போது, செம ஸ்டைலான புதிய போட்டோஸை இப்போது பதிவிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக, உலகுக்கு வர்ணம் பூசி, அதை உங்களுடையதாக ஆக்குங்கள் என்று கூறியுள்ளார். இதற்கு பலர் தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர். இந்த உலகத்துக்கு எப்படி பெயின்ட் அடிக்க? என்று ஒருவர் கேட்டுள்ளார்.

எப்போதும் உங்களோட

எப்போதும் உங்களோட

நிகழ்ச்சி தொகுப்பாளரான பாவனா பாலகிருஷ்ணன், எங்க இருக்கீங்க ஹீரோயின்? என்று கேட்டுள்ளார். அதற்கு, பிரியா பவானி, எப்போதும் உங்களோடதான் என்று கூறியுள்ளார். இதைக் கலாய்த்துள்ள ஒரு நெட்டிசன், அதுக்கு இதில் பதில் இல்லையே என்று தெரிவித்துள்ளார்.

அடிடா பெயின்ட்டை

அடிடா பெயின்ட்டை

ஒரு ரசிகர், 'இந்த பூமியென்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா, அடிடா பெயின்ட்டை' என்று சூரரைப் போற்று பட டயலாக்கை உல்டாவாகக் கூறியுள்ளார். இன்னொருவர், லட்சம் பூப்பறிச்சு, மிச்சம் தேன் தெளிச்ச அழகு என்று பாடலாக வர்ணித்துள்ளார். பிரியா பவானி சங்கரின் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X