இதுதான் மயக்கும் பியூட்டியா? சேலையில் நடிகை பிரியா பவானி சங்கர்.. வைரலாகும் போட்டோஸ்!
சென்னை: நடிகை பிரியா பவானி சங்கர், சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளரான பிரியா பவானி சங்கர், கல்யாணம் முதல் காதல்வரை என்ற டி.வி.தொடரில் நடித்தார்.
இது அவரை பிரபலமாக்கியது. அடுத்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தன. மேயாத மான் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

கடைக்குட்டி சிங்கம்
அடுத்து, பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடித்தார். இதில் அவர் நடிப்பு கவனிக்கப்பட்டது. அடுத்து எஸ்.ஜே. சூர்யாவின் மான்ஸ்டர், அருண் விஜய்யின் மாஃபியா படங்களில் நடித்தார். இப்போது ராதா மோகனின் பொம்மை, குறத்தி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, களத்தில் சந்திப்போம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

சிம்புவின் பத்து தல
அடுத்து ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2, கசடதபற, வான் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். டைம் என்ன பாஸ் என்ற வெப் சீரிஸிலும் நடித்திருந்தார். இதற்கிடையே லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன், சிம்புவின் பத்து தல படங்களில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

பிறந்த நாள்
இவர் சில மாதங்களுக்கு முன் தனது காதலர் ராஜவேலின் புகைப்படத்தை பதிவிட்டு, காதலரை அறிமுகப்படுத்தி இருந்தார். கல்லூரி காலத்தில் இருந்தே அவரைக் காதலித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். ராஜவேலுக்கு சமீபத்தில் பிறந்த நாள். இதையடுத்து, 2011 ஆம் ஆண்டும் இப்போதும் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டார்.

உறுதியாகி இருக்கிறது
'இந்தப் பத்து வருடங்களில் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. ஆனால், நமக்கான காதல் மாறாமல் இன்னும் உறுதியாகி இருக்கிறது. இந்த உலகின் எதற்கும் நீங்கள் தகுதியானவர். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்.

சேலை போட்டோஸ்
அடிக்கடி இன்ஸ்டாவில் புதிய போட்டோக்களை பதிவு செய்து வரும் பிரியா பவானி சங்கர், இப்போது சேலையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நெட்டிசன்ஸ், இந்த போட்டோக்களில் செம அழகாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மயக்கும் பியூட்டி
சிலர், அக்கா சேலையில் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று கூறியுள்ளனர்.. சிலர் அவர் அழகை புகழ்ந்து தள்ளியுள்ளனர். இதுதான் மயக்கும் பியூட்டி என்றும் பச்சை நிறமே பச்சை நிறமே என்றும் பலர் தெரிவித்துள்ளனர். சிலர் ஓவராக வழிந்தும் ஒரு ஹாய் கேட்டும் கமென்ட் போட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











