வேண்டாம்கா கிளாமர்.. துபாய் நீச்சல் குளத்தில் பிரியா பவானி சங்கர்.. வைரல் போட்டோஸ்.. கெஞ்சும் பேன்ஸ்

By

சென்னை: நடிகை பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ள நீச்சல் குள போட்டோஸ் வேகமாக பரவி வருகிறது.

நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர், கல்யாணம் முதல் காதல்வரை என்ற டி.வி.தொடர் மூலம் நடிகையானார்.

மேயாத மான் படத்தில் ஹீரோயினாக நடித்தார். இதில் கவனிக்கப்பட்டதும் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன.

எக்கச்சக்க வரவேற்பு

எக்கச்சக்க வரவேற்பு

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடித்தார். இதில் அவர் நடிப்புக்கு எக்கச்சக்க வரவேற்பு. எஸ்.ஏ.சூர்யாவின் மான்ஸ்டர் படத்திலும் அவர் நடிப்பு பேசப்பட்டது. அடுத்து அருண் விஜய்யின் மாஃபியா படத்தில் நடித்தார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2, ராதாமோகனின் பொம்மை உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

முற்றுப்புள்ளி கிசுகிசு

முற்றுப்புள்ளி கிசுகிசு

இவர் பற்றி காதல் கிசுகிசுகள் அடிக்கடி வெளியாகின. அதை மறுத்து வந்த பிரியா, பின்னர், தனது காதலர் ராஜ்வேலின் புகைப்படத்தை பதிவிட்டு, காதலை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். தன்னைப் பற்றி வந்த கிசு கிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

செல்ல சிணுங்கல்

செல்ல சிணுங்கல்

இந்நிலையில் காதலருக்கும் அவருக்கும் அவ்வப்போது செல்ல சிணுங்கல்கள் நடக்கும். தங்கள் சமூக வலைதளப்பக்கங்களில், கோபத்தில் எதையாவது குறிப்பிடுவார்கள். அது வைரலாகும். சில மாதங்களுக்கு முன், நாம் ஒருவருடன் கோபமாக இருந்தாலும், அவரோடுதான் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால், போட்டோ எடுப்பதன் மூலம் சமாதானம் ஆகிவிடலாம் என நினைக்கிறார் என்று கூறியிருந்தார்.

குளத்தில் குளிப்பது

குளத்தில் குளிப்பது

இது அப்போது பரபரப்பானது. இந்நிலையில் துபாய் சென்றுள்ள நடிகை பிரியா பவானி, நீச்சல் குளத்தில் குளிப்பது போன்ற சில புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். லட்சக்கணக்கான லைக்ஸ்களை அள்ளி இருக்கும் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ட்ரீம் 11ல டீம் போடுங்க

ட்ரீம் 11ல டீம் போடுங்க

நெட்டிசன்ஸ் ஜாலியான டைமிங் கமென்ட்களால் தெறிக்கவிட்டுள்ளனர். ஒரு நெட்டிசன், இதை நான் பார்க்கிறேன்.. நீங்க போய் ட்ரீம் 11ல டீம் போடுங்க என்று கூறியுள்ளார். ஓ துபாயா? ஷார்ஜா ஸ்டேடியம் கிட்ட பார்த்துப் போங்க, அடிக்கடி பந்து வந்து விழுது என்று அட்வைஸ் செய்துள்ளனர்.

டஃப் கொடுப்பீங்க

டஃப் கொடுப்பீங்க

ஒரு சிலர், 'இவ்ளோ நாளா நல்லாதானே போஸ்ட் பண்ணிட்டு இருந்தீங்க.. இப்ப ஏன் நீச்சல் குள ஸ்டில்? என்று கேட்டுள்ளனர். 'பில்லா 3' லுக் மாதிரி இருக்கு என்று சிலரும், பில்லாவுக்கு டஃப் கொடுப்பீங்க போலிருக்கே என்று சிலரும் கமென்ட் அடித்துள்ளனர். சிலர் நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? என்று கேட்டுள்ளனர்.

வேண்டாம்கா

வேண்டாம்கா

சிலர், செம போல்ட் ஸ்டில்ஸ், படத்துலயும் இப்படியே நடிங்க என்று தெரிவித்துள்ளனர். 'வேண்டாம்கா, நமக்கு இந்த கிளாமர்லாம் வேண்டாம் என்று சிலர் கூறியுள்ளனர். ஆஹா என்னா லுக், செமத்தனமா இருக்கு என்று பலர் அவர் அழகை புகழ்ந்து தள்ளியுள்ளனர். பிரியா பவானி சங்கரின் இந்த புகைப்படங்கள் வேகமாக பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X