twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு நூற்றாண்டின் குரல் ஒய்ந்திருக்கிறது.. பிரியா பவானி சங்கர் உருக்கமான பதிவு #SPBalasubramaniam

    |

    சென்னை: ஒரு நூற்றாண்டின் குரல் ஓய்ந்திருக்கிறது என நடிகை பிரியா பவானி சங்கர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவிற்கு உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    கொரோனா அரக்கனிடம் இருந்து மீண்ட நிலையில், மாரடைப்பு காரணமாக மறைந்து விட்டார் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

    ஆயிரம் நிலவாக எப்போது ரசிகர்களின் இதய வானில் அவர் வலம் வருவார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    6 முறை தேசிய விருது வென்ற எஸ்.பி. பாலசுப்ரமணியம்.. எந்த எந்த பாடலுக்கு தெரியுமா? 6 முறை தேசிய விருது வென்ற எஸ்.பி. பாலசுப்ரமணியம்.. எந்த எந்த பாடலுக்கு தெரியுமா?

    ஹேட்டர்களே இல்லை

    ஹேட்டர்களே இல்லை

    இனிமையான குரலால் எமனையும் ரசிக்க வைக்கும் ஆற்றல் வாய்ந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த மண்ணில் பாடியது போதும் விண்ணில் எங்களுக்காக பாட வாருங்கள் பாலுவே என அன்போடு காலன் அழைத்துச் சென்றதாகத் தான் ரசிகர்கள் அவரது மறைவை கருதுகின்றனர். ஹேட்டர்களே இல்லாத மனிதர்களில் எஸ்.பி.பியும் ஒருவர்.

    பிரபலங்கள் இரங்கல்

    பிரபலங்கள் இரங்கல்

    பிரதமர் மோடி, ரஜினிகாந்த், இளையராஜா, கமல்ஹாசன், பாரதிராஜா, மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ், திரிஷா, வெங்கட் பிரபு, பிரசன்னா, ஆர்யா, வரலக்‌ஷ்மி சரத்குமார், ஷங்கர், ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஷ் ஜெயராஜ், தமன், இமான், யோகி பாபு, டி.ராஜேந்தர், சிவகுமார், கார்த்தி என ஏகப்பட்ட பிரபலங்கள் எஸ்.பி.பி. மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    கதறி அழும் ரசிகர்கள்

    கதறி அழும் ரசிகர்கள்

    எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலை சீராகி வருகிறார் என்கிற செய்தியால் ஆறுதல் அடைந்த ரசிகர்களின் மனதில் பலத்த இடியாக அவரது இரங்கல் செய்தி இறங்கி உள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகளவில் உள்ள அவரது இசை ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    ஒரு நூற்றாண்டின் குரல் ஒய்ந்திருக்கிறது

    ஒரு நூற்றாண்டின் குரல் ஒய்ந்திருக்கிறது

    இந்நிலையில், இளம் நடிகை பிரியா பவானி சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "SPB அவர்கள் இல்லாத உலகம்! ஒரு நூற்றாண்டின் குரல் ஒய்ந்திருக்கிறது. எத்தனை நட்சத்திரங்களை உருவாக்கிய குரல். எத்தனைப் பேரை ஆட வைத்த, சிரிக்க வைத்த, காதலிக்க வைத்த, அழ வைத்த குரல்! காற்று இருக்கும் வரை கேட்க இருக்கும் குரல். ‘இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்' என்ற குரல்." என நெகிழ்ச்சியான பதிவை பதிவிட்டு ரசிகர்கள் மனங்களை வென்றுள்ளார்.

    அழிவில்லா புகழுக்கு

    அழிவில்லா புகழுக்கு

    அழிவில்லா புகழுக்கு சொந்தக்காரர் பாடும் நிலா பாலு என ரசிகர் ஒருவர் பிரியா பவானி சங்கரின் பதிவுக்கு கீழே கமெண்ட் செய்துள்ளார். ஏகப்பட்ட ரசிகர்கள், பிரபலங்கள் மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் நினைவுகளை நினைத்து வருகின்றனர். அவரது பாடல்களை யூடியூப், சாவன் உள்ளிட்ட தளங்களில் அதிகளவில் தேடி வருகின்றனர்.

    மூச்சு விடாமல் பாடியவர்

    மூச்சு விடாமல் பாடியவர்

    மண்ணில் இந்த காதலின்றி பாடலை மூச்சு விடாமல் பாடிய எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடைசியாக தனது இறுதி மூச்சை விட்டு இசையாக மலர்ந்து விட்டார் என ஏகப்பட்ட ரசிகர்கள் அந்த பாடலை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். தல அஜித்தின் அமர்களம் படத்தில் வரும் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலையும் பகிர்ந்து வருகின்றனர்.

    English summary
    Actress Priya Bhavani Shankar wrote an heart felt note on legendary singer SP Balasubrahmanyam demise.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X