அவர் கெட்ட வார்த்தை பேச மாட்டார்… இயக்குநரை புகழ்ந்து தள்ளிய பிரியா பவானி சங்கர்!
சென்னை : சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த பத்து தல இசை வெளியீட்டு விழாவில் நடிகை பிரியா பவானி சங்கர் சிம்புவை புகழ்ந்து பேசினார்.
இந்த விழாவில், சிம்பு, ஏஆர் ரஹ்மான், கௌதம் கார்த்தி, இயக்குநர் ஒபேலி என்.கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் பத்து தல படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இப்படம் இந்த மாதம் 30ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

சிம்புவின் பத்து தல
நெடுஞ்சாலை, ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியுள்ளார். கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற முஃப்தி படத்தின் ரீமேக்கான இப்படத்தில், சிம்பு ஏஜிஆர் என்னும் டான் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பத்து தல படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் பாடிய நினைவிருக்கா பாடல் இணையத்தில் டிரெண்டித்து வருகிறது

பிரியா பவானி சங்கர்
இந்நிலையில், பத்து தல வெளியீட்டு விழாவில் பேசிய பிரியா பவானி சங்கர், இசைவெளியீட்டு விழா பிரம்மாண்டமாக இருக்கும் என்று தெரியும் இருந்தாலும் இவ்வளவு பிரம்மாண்டமா இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு பெரிய ஸ்டாரை வைத்து ஒரு படத்தை இயக்கும் போது இயக்குநருக்கு ரொம்ப டென்ஷன் இருக்கும். ஆனால், இயக்குநர் கிருஷ்ணா டென்ஷனாகி கத்தியோ,கெட்டவார்த்தை பேசியோ நான் பார்த்தது இல்லை.

நல்ல பண்பு கொண்ட மனிதர்
மனித உணர்வை மதிக்க தெரிந்தவர், பெரிய ஸ்டாராக இருந்தாலும், சின்ன ஸ்டாராக இருந்தாலும் இருவருக்கும் சமமான மரியாதை கொடுப்பார். உங்களின் இந்த பண்பை நான் உண்மையில் மதிக்கிறேன். கௌதம் மேனன் சார் ஒரு நல்ல மனிதரை சினிமாவிற்கு கொடுத்து இருக்கிறார். இப்போது கௌதம் மேனன் படங்களில் நடித்து வருகிறார். அவர் இன்னும் பல படங்களை இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பெருமைப்படுகிறேன்
சிம்புக்கூட எனக்கு படத்தில் நிறைய நேரம் செலவழிக்க முடியாமல் போனது. ஆனால், இந்த இடத்தில் அவருக்கு கிடைக்கும் அன்பை பார்க்கும் போது ரொம்ப பிரமிப்பாக இருக்கிறது, மக்களின் அன்பை வெல்வது அவ்வளவு ஈசியான விஷயம், இல்லை இது யாருக்கும் கிடைத்துவிடாது. இந்த படத்தில் நான் உங்களுடன் இணைந்த நடித்ததை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் என்று அழகாக பேசினார்.


Click it and Unblock the Notifications











