காதலரை மட்டும் பிரிஞ்ச அவ்வளவுதான் நான் போய்டுவேன்.. ப்ரியா பவானி சங்கரை அதட்டிய தாய்

சென்னை: ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகையாக இருக்கிறார். கடைசியாக அவர் தமிழில் இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. மேலும் பலரும் ப்ரியாவை கடுமையாக ட்ரோல் செய்தனர். சூழல் இப்படி இருக்க அவரது நடிப்பில் அடுத்ததாக டிமாண்ட்டி காலனி 2 படம் வெளியாகவுள்ளது. இந்தச் சூழலில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தனது காதலர் ராஜவேலு குறித்து ஓபனாக பேசியிருக்கிறார்.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தோன்றி; பிறகு சீரியலில் நடிக்க ஆரம்பித்தவர் ப்ரியா பவானி சங்கர். அதற்கு பிறகு மேயாத மான் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. முதல் பட வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ஜெயம் ரவி, சிம்பு என முன்னணி நடிகர்களின் படத்திலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் அகிலன், பத்து தல, ருத்ரன் ஆகிய படங்கள் வெளியாகின. மூன்று படங்களுக்கும் சுமாரான வரவேற்பு கிடைத்தாலும் ப்ரியா பவானி சங்கருக்கு சூப்பரான வரவேற்பை ரசிகர்கள் கொடுத்திருக்கின்றனர்.

Priya Bhavani Shankar Indian 2 Demonty Colony 2 2

ராசியில்லாத நடிகை?: ப்ரியா பவானி சங்கர் கைவசம் இப்போது ஏராளமான படங்கள் இருக்கின்றன. அதேசமயம் கடைசியாக அவர் நடித்த இந்தியன் 2, ரத்னம், ருத்ரன், பொம்மை உள்ளிட்ட அத்தனை படங்களுமே தோல்வியைத்தான் சந்தித்தன. இதன் காரணமாக அவர் ராசியில்லாத நடிகை என்று ஒருதரப்பினரால் கூறப்படுகிறது. இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில்கூட பல விஷயங்களை ஓபனாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

டிமாண்ட்டி காலனி 2: அவரது நடிப்பில் அடுத்ததாக டிமாண்ட்டி காலனி 2 படம் வெளியாகிறது. ஏற்கனவே வெளியான இந்தப் படத்தின் முதல் பாகம் சூப்பர் ஹிட்டடித்ததன் காரணமாக இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் இருக்கிறது. முக்கியமாக இந்தப் படம் தனக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என்று ரொம்பவே நம்பியிருக்கிறார் ப்ரியா பவானி சங்கர்.

காதல்: இதற்கிடையே ப்ரியா பவானி சங்கர் கல்லூரி படிக்கும்போதே காதலித்துவருகிறார். அவர் ராஜவேலு என்பவரை காதலிக்கிறார். ராஜவேலு வெளிநாட்டில் வேலை செய்துவருவது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி இரண்டு பேரும் அவுட்டிங் செல்வதும்; அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாவதும் வழக்கமான ஒன்று.

ப்ரியா பவானி சங்கர் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது காதலர் குறித்து பேசியிருக்கிறார் ப்ரியா. அவர் அளித்த பேட்டியில், "அடுத்த வருடம் எனக்கும் ராஜுக்கும் திருமணம் நடக்கும். அவர் மிகச்சிறந்த மனிதர். நான் ஒரு சாதாரண மிடில்கிளாஸ் குடும்பத்திலிருந்து வந்தவள். எனவே சினிமா, மீடியா மீது எப்போதும் குடும்பத்தினருக்கு ஒரு அச்சம் இருக்கும். ஆனால் ராஜ் அப்படி இல்லை. ஒருமுறை எனது அம்மா என்னிடம், 'நீ மட்டும் ராஜை விட்டுட்டு போன.. நான் உன் முகத்திலேயே முழிக்க மாட்டேன். அவருடன் சென்று அவர் வீட்டிலேயே தங்கிவிடுவேன்' என்று கூறினார். அந்த அளவுக்கு என்னைவிட ராஜை அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும்' என்றார்.

சொந்த தொழில்: முன்னதாக சினிமாவில் மட்டுமின்றி தொழிலிலும் கவனம் செலுத்துகிறார் அவர். அந்தவகையில், லியாம்ஸ் டைனர் (Liam's Diner)என்ற ஹோட்டலை சென்னையில் திறந்தார். புதிய தொழில் தொடங்கிய அவருக்கு ரசிகர்கள் முதல் செலிபிரிட்டிகள் வரை வாழ்த்துகள் தெரிவித்தனர். அந்த ஹோட்டலை அவர் தனது காதலருக்காக தொடங்கியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X