இந்தியன் 2 பட வாய்ப்பு இப்போ வந்தாலும் நடிப்பேன்.. ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்!
சென்னை: இந்தியன் 2 படம் இந்தளவுக்கு ட்ரோல் செய்யப்பட்டு வரும் நிலையில், அந்த படத்தின் வாய்ப்பு இப்போது வந்தால் கூட நடிப்பேன் என நடிகை பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார். இந்த ஆண்டு பிரியா பவானி சங்கருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
ஒரு பக்கம் அதை நினைத்து சந்தோஷப்பட்டாலும், மறுபக்கம் வெளியாகும் படங்கள் எல்லாம் தோல்வியை தழுவி வரும் நிலையில், ரொம்பவே மனம் வாடி வருகிறார் பிரியா பவானி சங்கர்.

ராசியில்லாத நடிகை என்றே பலரும் தன்னை அசிங்கப்படுத்தி ஒதுக்க முடிவு செய்து வருவதை அறிந்தாலும், அதையெல்லாம் பார்த்தால் நடிக்க முடியாது என ஓபனாக பேசியுள்ளார்.
இந்தியன் 2 ட்ரோல்: மேயாத மான் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான பிரியா பவானி சங்கர் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம், தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். அதே போலத்தான் இந்த ஆண்டு வெளியான இந்தியன் 2 படத்திலும் அவர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்காமல் அவருடைய தோழியாகவே நடித்திருப்பார். இந்தியன் 2 படம் வெளியாகி ஷங்கர், சித்தார்த், கமல்ஹாசன், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா என பலரை ரசிகர்கள் கிண்டல் செய்தாலும் அதை விட அதிகமாக பிரியா பவானி சங்கரை பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இப்போ இந்தியன் 2 சான்ஸ் கிடைச்சாலும்: இண்டஸ்ட்ரியில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை வேண்டாம் என ஏதாவது ஒரு நடிகையை சொல்ல சொல்லுங்க பார்ப்போம். இந்தியன் 2 படம் இந்த அளவுக்கு ட்ரோல் ஆன பிறகும் கூட அதை பற்றி தெரிந்தாலும், இப்போ புதுசா இந்தியன் 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தாலும், அதை நோ சொல்லாமல் நான் நடிப்பேன். யாரா இருந்தாலும் அதைத்தான் பண்ணுவாங்க. ஒரு பெரிய படத்தில் நடிக்க சான்ஸ் கிடைப்பதே பெரிய விஷயம் தான். படம் எப்படி பர்ஃபார்ம் பண்ணும் என்பது எல்லாம் நடிக்கும் போது நமக்கு தெரியவே தெரியாது என ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ரசிகர்கள் மன்னிச்சுடுங்க: என்னோட ரசிகர்கள் என்னிடம் அதிகம் எதிர்பார்த்து ஏமாந்து போன நிலையில், அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். டிமான்ட்டி காலனி 2 படம் கண்டிப்பாக உங்களை ஏமாற்றாது என பிரியா பவானி சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











