என்னது பிக் பாஸ் வீட்டுக்கு பிரியா பவானி சங்கர் வரப்போறாரா? வேற லெவல் தான் போங்க!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் இளம் நடிகைகள் பிரபலமானவர்கள் பங்கேற்று வரும் நிலையில், இந்த சீசனில் ரசிகர்கள் பெரிதாக எதிர்பார்த்த யாருமே கலந்து கொள்ளவில்லை என்பது பலருக்கும் வருத்தத்தை அளித்துள்ளது.

18 போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், இருவர் வெளியேறிய நிலையில், அடுத்ததாக யார் உள்ளே நுழைய போகிறார் என்கிற ஆவலும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டுக்கு நடிகை பிரியா பவானி சங்கர் வரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெளியேறிய நமீதா மாரிமுத்து

வெளியேறிய நமீதா மாரிமுத்து

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தவிர்க்க முடியாத காரணத்திற்காக திருநங்கை போட்டியாளர் நமீதா மாரிமுத்து அவராகவே வெளியேறிவிட்டார் என அறிவித்தது ரசிகர்களை ரொம்பவே ஷாக்காக்கியது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் நமீதாவை பங்கேற்க செய்த விஜய் டிவியை ரசிகர்கள் பாராட்டிய நிலையில், நமீதாவின் வெளியேற்றம் அந்த நிகழ்ச்சியின் மீதான நம்பிக்கையை முற்றிலுமாக கெடுத்துள்ளது.

எவிக்‌ஷன் டே

எவிக்‌ஷன் டே

நமீதா மாரிமுத்து அவராகவே வெளியேறிய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நாடியா சங்கை இன்று கமல் வெளியேற்றப் போகிறார் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன. டேஞ்சர் ஸோனில் இருக்கும் 5 பேரில் கடைசி நபராகத் தான் அபிஷேக் ராஜா சேவ் ஆகிறார் என்கிற தகவலும் வைரலாகி வருகிறது.

அடுத்தது யாரு

அடுத்தது யாரு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ரசிகர்கள் மனங்களை பெரிதும் யாரும் வெல்லவில்லை என்றே வெளிப்படையாக தெரிகிறது. இந்நிலையில், வைல்டு கார்டு என்ட்ரியாக ஒரு சூப்பர் போட்டியாளர் உள்ளே நுழைந்து டைட்டிலை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் அடுத்து யாரு உள்ளே வரப் போறாங்க என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

பிசியான நடிகை

பிசியான நடிகை

தமிழ் சினிமாவில் அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருக்கும் ரொம்பவே பிசியான நடிகை பிரியா பவானி சங்கர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்கிற அட்டகாசமான தகவல் தற்போது கிடைத்துள்ளது. நிச்சயம் பிக் பாஸ் வீட்டில் அவர் சில மேஜிக்குகளை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியாளர் அல்ல

போட்டியாளர் அல்ல

ஆனால், பிரியா பவானி சங்கர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க போவது இல்லை என்றும் அவர் நடிப்பில் வரும் அக்டோபர் 22ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ள ஓ மணப்பெண்ணே படத்தின் புரமோஷனுக்காகவே பிரியா பவானி சங்கர் பிக் பாஸ் வீட்டுக்குள் வரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹரிஷ் கல்யாண்

ஹரிஷ் கல்யாண்

முன்னாள் பிக் பாஸ் பிரபலமான ஹரிஷ் கல்யாணும் நடிகை பிரியா பவானி சங்கர் உடன் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து போட்டியாளர்களை சந்தித்து தனது பிக் பாஸ் கால அனுபவங்களை எல்லாம் பகிர்ந்து கொள்வார் என்றும் ஓ மணப்பெண்ணே படத்தின் டிரைலர் போட்டியாளர்களுக்கு போட்டு காண்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X