'நம் காதல் மட்டும்..' தனது காதலர் பிறந்த நாளுக்கு நடிகை பிரியா பவானி சங்கரின் டச்சிங் போஸ்ட்!
சென்னை: தனது காதலரின் பிறந்த நாளை முன்னிட்டு, நடிகை பிரியா பவானி சங்கர் டச்சிங்கான போஸ்ட் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
தமிழில் சினிமாவின் மோஸ்ட் வான்டட் நாயகி ஆகியிருக்கிறார் பிரியா பவானி சங்கர்.
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

கடைக்குட்டி சிங்கம்
டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளரான பிரியா பவானி சங்கர், கல்யாணம் முதல் காதல்வரை என்ற டி.வி.தொடரில் நடித்தார். இது அவரை பிரபலமாக்கியது. அடுத்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தன. மேயாத மான் படத்தில் ஹீரோயினாக நடித்தார். அடுத்து, பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடித்தார்.

களத்தில் சந்திப்போம்
இதில் அவர் நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தது. எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர் அருண் விஜய்யுடன் மாஃபியா படங்களில் நடித்தார். ராதா மோகனின் பொம்மை, குறத்தி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, களத்தில் சந்திப்போம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

சிம்புவின் பத்து தல
அடுத்து ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2, கசடதபற, வான் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். டைம் என்ன பாஸ் என்ற வெப் சீரிஸிலும் நடித்திருந்தார். இதற்கிடையே லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன், சிம்புவின் பத்து தல படங்களில் நடித்து வருகிறார்.

காதலர் ராஜவேல்
இவரை சில நடிகர்களுடன் இணைத்து கிசு கிசு வெளியானது. இந்நிலையில் அதை மறுத்து நடிகர் பிரியா பவானி சங்கர், தனது காதலர் ராஜவேலின் புகைப்படத்தை பதிவிட்டு, காதலை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். கல்லூரி காலத்தில் இருந்தே அவரைக் காதலித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

உருக்கமான பிறந்தநாள்
அவர் காதலர் ராஜவேலுக்கு நேற்று பிறந்த நாள். இதையடுத்து 2011 ஆம் ஆண்டும் இப்போதும் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் பிரியா பவானி சங்கர். இந்தப் பத்து வருடங்களில் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது.

அதிசய விஷயம்
ஆனால், நமக்கான காதல் மாறாமல் இன்னும் உறுதியாகி இருக்கிறது. இந்த உலகில் எதற்கும் நீங்கள் தகுதியானவர். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். இதையடுத்து பலர் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். ஒருவர், பத்து வருஷமா காதல் தொடர்வது, இப்போது அதிசயமான விஷயம்தான் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











