Priya Bhavani shankar: பிரியா பவானி சங்கருக்கு முத்தம் கொடுத்த காதலர்.. ட்ரெண்டிங்கில் புகைப்படம்!

சென்னை: நடிகை பிரியா பவானி சங்கர் அடுத்தடுத்து சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக கமல்ஹாசன் -ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்திலும் இவர் முக்கியமான கேரக்டரில் இணைந்துள்ளார்.

அருண் விஜய், கௌதம் கார்த்திக் என அடுத்தடுத்து ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர்.

நடிகை பிரியா பவானி சங்கர்: நடிகை பிரியா பவானி சங்கர் தமிழில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் அருண் விஜய் ஜோடியாக யானை, கௌதம் கார்த்திக்குடன் பத்துல தல உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன. அடுத்தடுத்த அதிகமான படங்களில் கமிட்டாகி நடித்து வரும் பிரியா பவானி சங்கர் அடுத்ததாக கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் அறிமுக வீடியோவிலும் இவர் காணப்பட்டார்.

அடுத்தடுத்த படங்கள்: தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மிகவும் அதிகமான படங்களில் கமிட்டாகியுள்ள நடிகையாக இவர் உள்ளார். இந்தியன் 2 படத்தில் மட்டுமில்லாமல் டிமான்டி காலனி 2 படத்திலும் இவர் நடித்துள்ளார். இந்தப் படங்கள் அடுத்த ஆண்டில் திரைக்கு வரவுள்ளன. தெலுங்கில் கோபிசந்த் ஜோடியாக பீமா என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இது இவரது இரண்டாவது தெலுங்குப்படம்.

பிரியா பவானி சங்கர் -ராஜவேல் காதல்: முன்னதாக செய்தி வாசிப்பாளராக தன்னுடைய கேரியரை துவங்கிய பிரியா பவானி சங்கர், சீரியல் நடிகையாக சிறப்பு காட்டினார். தொடர்ந்து மேயாத மான் என்ற படத்தின் மூலம் என்ட்ரிகொடுத்து தற்போது பிசியான நடிகையாக மாறியுள்ளார். இவர் தன்னுடைய கல்லூரி காலத்திலிருந்தே ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார். அவ்வப்போது இவர்களின் புகைப்படங்கள் மற்றும் செய்திகள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன.

தீபாவளி வாழ்த்து: தற்போது தீபாவளி வாழ்த்துக்களை பகிரும் வகையில் பிரியா பவானி சங்கருடன் தான் நெருக்கமாக உள்ள புகைப்படத்தை ராஜவேல் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமான கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் புகைப்படத்தில் பிரியா பவானி சங்கருக்கு, ராஜவேல் முத்தம் கொடுக்கும்படியாக உள்ளது. அவரது நெருக்கத்தை பிரியா பவானியும் அதிகமாக என்ஜாய் செய்வதாக காணப்படுகிறது.

Priya bhavani shankar with her lover photo trending in social media


முன்னணி நடிகர்களுடன் ஜோடி: தொடர்ந்து முன்னணி கார்த்தி, தனுஷ், எஸ்ஜே சூர்யா, கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள பிரியா பவானி சங்கர், சில மாதங்களுக்கு முன்பும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். முன்னதாக இந்த காதல் பிரேக் அப் ஆனதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதற்கு பதிலளிக்கும்வகையில் இந்த புகைப்படங்கள் அமைந்திருந்தன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X