ஓவர்.. ஓவர்.. குருதி ஆட்டம் படத்தின் அந்த வேலை ஓவர்.. குஷியில் பிரியா பவானி சங்கர்!

சென்னை: குருதி ஆட்டம் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

8 தோட்டாக்கள் படத்தை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் குருதி ஆட்டம்.

இந்த படத்தில் நாயகனாக அதர்வாவும், நாயகியாக பிரியா பவானி சங்கரும் நடித்து வருகின்றனர்.

ஆரம்பமே சர்ச்சை

ஆரம்பமே சர்ச்சை

குருதி ஆட்டம் என்ற தலைப்புக்கே இந்த படத்தை துவங்கும் போதே பல பிரச்சனைகளை சந்தித்தார் 8 தோட்டாக்கள் இயக்குநர் ஸ்ரீ கணேஷ். பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு நடைபெற்ற சமரசங்களை தொடர்ந்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு வெளியாகி வைரலானது.

என்ன கதை

என்ன கதை

ஒரு விபத்துக்கு பிறகு, ஒரு குழந்தையை காப்பாற்ற ஹீரோ போராடும் போராட்டமே குருதி ஆட்டம் படத்தின் கதை என பேட்டி ஒன்றில் இயக்குநர் படத்தின் மைய கருவை பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கருக்கு அழுத்தமான சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்திருக்குமாம்.

டப்பிங் ஓவர்

டப்பிங் ஓவர்

லாக்டவுன் தளர்வால் திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. குருதி ஆட்டம் படத்தின் டப்பிங்குக்காக வீட்டை விட்டு ஸ்டூடியோ சென்ற நடிகை பிரியா பவானி சங்கர் அந்த படத்திற்கான டப்பிங்கை முழுவதுமாக பேசி முடித்துள்ளார். மற்ற இறுதி கட்ட பணிகள் நிறைவடைந்ததும் படம் ரிலீசுக்கு ரெடியாகி விடும் என படக்குழு அறிவித்துள்ளது.

Recommended Video

Priya Bhavani Shankar love Breakup | latest post | RajaVel |Mafia, Bommai | Reacting Gossip
நிறைய படங்கள்

நிறைய படங்கள்

எஸ்.ஜே. சூர்யாவின் பொம்மை, கமல்ஹாசனின் இந்தியன் 2, அதர்வாவின் குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ள நடிகை பிரியா பவானி சங்கர், அடுத்ததாக விஷாலுடன் ஒரு படத்திலும் ராகவா லாரன்ஸ் உடன் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும், அவரது கால்ஷீட்டுக்காக பல படங்கள் காத்திருப்பதாகவும் தகவல்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X