அடுத்த மான்ஸ்டர் ரெடி.. ’பொம்மை’ ஷூட்டிங்கை முடித்த பிரியா பவானி சங்கர்!
Recommended Video
சென்னை: நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர் நடித்த மான்ஸ்டர் திரைப்படம், இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
இந்நிலையில், ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்து வரும் பொம்மை படத்தில் மீண்டும் எஸ்.ஜே. சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த பிரியா பவானி சங்கர், தற்போது பொம்மை படத்தில் தனது போர்ஷன் முடிந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வெயிட்டிங்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஃபியா படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். அந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், அந்த படத்தின் ரிலீசுக்காகவும், ராதாமோகனின் பொம்மை படத்தின் ரிலீசுக்காகவும் வெயிட்டிங்கில் உள்ளார் பிரியா பவானி சங்கர்.
மேலும், களத்தில் சந்திப்போம், இந்தியன் 2, கசட தபற உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

சீரியல் டு சினிமா
செய்தி வாசிப்பாளராக களமிறங்கிய பிரியா பவானி சங்கர், விஜய் டிவியில் வெளியான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து பிரபலமானார். அந்த பிரபலம் அவருக்கு வெள்ளித்திரையில் மேயாத மான் படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கியது. மேயாத மான் படத்தைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

ஹோம்லி கேர்ள்
சாதாரண குடும்பத்தை சேர்ந்த பிரியா பவானி சங்கர் இதுவரை ஹோம்லி கேர்ள் லுக்கில் தான் சினிமா உலகில் வலம் வருகிறார். அவரது ரசிகர்களும் அந்த லுக்கில் தான் பிரியா பவானி சங்கர் அழகாக இருப்பதாகவும் கூறி வருகின்றனர். சினிமாவில் கவர்ச்சி காட்டாமல், நல்ல நடிப்பு திறமையாலும் ரசிகர்களை கவரலாம் என்பதற்கு சமீபத்திய உதாரணமாக பிரியா பவானி சங்கர் இருக்கிறார்.
பொம்மை
எஸ்.ஜே. சூர்யாவின் ஆங்கிள் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் படம் பொம்மை. இந்த படம் சைக்கோ மற்றும் ரொமான்டிக் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. பொம்மை படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மற்றொரு நாயகியாக சாந்தினி நடித்துள்ளார். 2020 பிப்ரவரி மாதம் காதலர் தின பரிசாக பொம்மை வெளியாகவுள்ளது.


Click it and Unblock the Notifications