ஆறடி ஆக்ஷன் ஹீரோவுக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி சங்கர்!
சென்னை : நடிகை ப்ரியா பவானி சங்கர் சிம்பு, கௌதம் கார்த்திக் நடிக்கும் பத்து தல திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்தியன் 2, பத்து தல, ருத்ரன் பொம்மை, ஹாஸ்டல், ஓ மணப் பெண்ணே, என ஒரு டஜன் திரைப்படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர்.
இந்தநிலையில் முன்னணி ஆக்சன் ஹீரோவின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மிகப்பெரிய பொருட்செலவில்
இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன்2 மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க ப்ரியா பவானி சங்கர் இதில் நடித்து வருகிறார். இந்தியன்2, ஓமணப்பெண்ணே பத்து தல, பொம்மை, ருத்ரன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

அசோக் செல்வனுக்கு ஜோடியாக
மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற "அடி கப்யாரே கூடமணி" திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஹாஸ்டல் படத்தில் நடித்து வரும் ப்ரியா பவானி சங்கர் இதில் முதல்முறையாக அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

ரசிகர் பட்டாளம்
இவ்வாறு தமிழ் சினிமாவில் மிக விரைவிலேயே முன்னணி நடிகையாக வலம் வர இருக்கும் இவருக்கு தொலைக்காட்சியிலிருந்தே மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்க இப்பொழுது திரைப்படங்களிலும் கலக்கிக் கொண்டிருக்கும் ப்ரியாவுக்கு தெலுங்கிலும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

விஷால் ஜோடியாக
இந்தநிலையில் அடங்கமறு திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேலு அடுத்து இயக்கும் ஆக்சன் திரைப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்த ப்ரியா பவானி சங்கர் ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை 5 ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். விஷால் ப்ரியா பவானி சங்கர் முதல் முறையாக இணையும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications











