Atlee - எல்லா பெண்களுக்கும் அட்லீ மாதிரியான கணவர் வேண்டும்.. மனம் உருகிய பிரியா
சென்னை:இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. அவரது இயக்கத்தில் கடைசியாக ஜவான் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் மெகா ஹிட்டாகி வசூல் வேட்டை நடத்தியது. இந்த சூழலில் அவரது மனைவி பிரியா அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இவற்றில் பிகிலை தவிர்த்து மற்ற படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. சூழல் இப்படி இருக்க ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி பாலிவுட்டிலும் எண்ட்ரி கொடுத்திருக்கிறார் அட்லீ.

ஜவான்: தமிழிலிருந்து ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் பாலிவுட்டில் படம் இயக்கி வெற்றி பெற்றனர். எனவே அவர்கள் அவரிசையில் அட்லீயும் இணைவரா என்ற எதிர்பார்ப்பு ஜவான் படத்தில் இருந்தது. ஷாருக்கானுடன் நயன் தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களையும் இங்கிருந்தே அழைத்து சென்றிருந்தார் அட்லீ.
விமர்சனம்: படத்துக்கு தமிழ்நாட்டில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. குறிப்பாக இது பல படங்களின் மூவி மிக்சர் என்ற விமர்சனம் எழுந்தது. அதேசமயம் பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அட்லீயின் மேக்கிங்கும், அவர் தொட்டிருந்த கதைக்களமும் பாலிவுட்டுக்கு புதிது என்பதால் அந்த வரவேற்பு கிடைத்ததாக ரசிகர்கள் கூறினர். வசூலிலும் 1000 கோடி ரூபாயை தொட்டது ஜவான்.
தொடர் வாய்ப்புகள்: ஜவான் படத்தின் வெற்றியால் அட்லீக்கு அடுத்தடுத்து பாலிவுட் வாய்ப்புகள் கிடைக்கும் என்றே பெரும்பாலும் கருதப்படுகிறது. அதிலும் ஜவானுக்கு கிடைத்த பாசிட்டிவ் ரெஸ்பான்ஸால் மீண்டும் அட்லீயுடன் இணைய ஷாருக்கான் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் தெறி படத்தின் ரீமேக்கையும் பாலிவுட்டில் செய்கிறார் அட்லீ. மேலும் விஜய்யையும், ஷாருக்கானையும் வைத்து படம் இயக்கும் ஐடியாவிலும் அவர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம்: இதற்கிடையே அவர் நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக அவர்கள் வலம் வருகிறார்கள். இந்நிலையில் அட்லீ குறித்து பிரியா கொடுத்திருக்கும் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டி ஒன்றில், "அட்லீயின் வெற்றிக்கு நான் காரணமாக இருக்கிறேனா என்பது எனக்கு தெரியவில்லை. என்னுடைய வாழ்க்கையில் என்னை மிகவும் உத்வேகப்படுத்தியது எனது அம்மா. அவர் இல்லையென்றால் நான் அட்லீக்கு உறுதுணையாக இருந்திருப்பேனா என்பது தெரியவில்லை.
நல்ல நண்பர்: அட்லீ எனக்கு நல்ல கணவர் என்பதை தாண்டி நல்ல நண்பர். இப்போதுவரை எனக்கு முதுகெலும்பாக அவர் இருக்கிறார். மேலும் மகன் மீர் வந்ததும் ரொம்பவே மகிழ்ச்சி. நாங்கள் எதிர்காலத்தில் மகிழ்ச்சியான தருணங்களை எதிர்பார்த்திருக்கிறோம். அட்லீ நல்ல மகனாக இருக்கிறார். எனக்கு சிறந்த கணவராகவும், எனது குடும்பத்துக்கு நல்ல மருமகனாகவும் இருக்கிறார். அனைத்து பெண்களுக்குமே அட்லீ போன்ற ஒரு கணவர் வேண்டும் என்ற எண்ணம்தான் இருக்கிறது. மீருக்கு சிறந்த அப்பாவாகவும் இருக்கிறார். அவனுக்கு என்ன தேவையோ அனைத்தையும் கொடுக்கிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications











