விஜய் ஆண்டனி படத்தில் திடீர் திருப்பம்... இயக்குனர் அதிரடி மாற்றம்!

சென்னை : கொலைகாரன் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனிக்கு தமிழரசன், அக்னிசிறகுகள் மற்றும் கோடியில் ஒருவன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

பிச்சைக்காரன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகிறது என சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகியிருந்தது.

பிச்சைக்காரன் பாகம் 2 என டைட்டில் வைக்கப்பட்டிருந்த அந்த படத்தை இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி இயக்க இருந்தார் ஆனால் இப்பொழுது பிரபல இளம் இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளார்.

பிச்சைக்காரன்

பிச்சைக்காரன்

கடந்த 2016ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழில் வசூலை குவித்த அளவிற்கு ஒரு படி மேலாகவே தெலுங்கில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து பிச்சைக்காரன் திரைப்படம் கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் ஆனது.

இயக்குனர் சசி

இயக்குனர் சசி

மென்மையான காதல் கதைகளை இயக்கி வந்த இயக்குனர் சசி அதிரடியான ஆக்சன் திரைப்படமாக வித்தியாசமான கதைக்களத்தில் பிச்சைக்காரன் படத்தை இயக்கி இருந்தார். விஜய் ஆண்டனி தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்து இருந்தார். கதாநாயகியாக சட்னா திடஸ் நடித்திருப்பார். மேலும் தீபா ராமானுஜம், முத்துராமன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பிச்சைக்காரன் பாகம் 2

பிச்சைக்காரன் பாகம் 2

பிச்சைக்காரன் பாகம் ஒன்று மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகிறது எனவும் அதன் கதையை விஜய் ஆண்டனியே எழுதுகிறார். இந்த படத்தை தேசிய விருது பெற்ற பாரம் பட இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி இயக்குகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் சசி-க்கு அடுத்தடுத்த திரைப்படங்கள் வரிசையாக இருப்பதால் பிச்சைக்காரன் பாகம் 2யை இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன்

இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன்

தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி இந்த படத்தை இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியானது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இப்போது திடீர் திருப்பமாக அப்படத்திலிருந்து பிரியா விலகியுள்ளார். மேலும் அதிரடி மாற்றமாக மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இந்த படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவர் தற்பொழுது விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் படத்தை இயக்கியுள்ளார். இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X