twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கூகுள் தேடல்: கண்ணடிச்சே தல, தளபதி, கான்களை ஓரங்கட்டிய ப்ரியா வாரியர்

    By Siva
    |

    Recommended Video

    2018-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்கள் பட்டியல்- வீடியோ

    சென்னை: 2018ம் ஆண்டில் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் மலையாள நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர்.

    ஒரு அடார் லவ் படத்தில் வரும் பாடலில் கண்ணடித்து ஒரே நாளில் இந்தியா முழுவதும் ஏகத்திற்கும் பிரபலமானவர் மலையாள நடிகையான ப்ரியா பிரகாஷ் வாரியர்.

    இந்நிலையில் அவருக்கு பெரிய கவுரவம் கிடைத்துள்ளது.

    ப்ரியா

    ப்ரியா

    2018ம் ஆண்டில் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது. அதில் முதலிடத்தில் இருப்பவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனஸ் 2வது இடத்திலும், நடன கலைஞர் சப்னா சவுத்ரி 3வது இடத்திலும் உள்ளனர்.

    ஆனந்த் அஹுஜா

    ஆனந்த் அஹுஜா

    கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா 4வது இடத்திலும், நடிகை சோனம் கபூரின் கணவர் ஆனந்த் அஹுஜா 5வது இடத்திலும், பாலிவுட் நடிகை சாரா அலி கான் 6வது இடத்திலும், சல்மான் கான் 7வது இடத்திலும், மெகன் மார்கல் 8வது இடத்திலும், இந்தி பிக் பாஸ் பிரபலம் அனுப் ஜலோடா 9வது இடத்திலும், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் 10வது இடத்திலும் உள்ளனர்.

    தீபிகா திருமணம்

    தீபிகா திருமணம்

    2018ம் ஆண்டு இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட செய்திகள் பட்டியலில் ஃபிஃபா உலகக் கோப்பை முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் ப்ரியங்கா சோப்ரா திருமண செய்தி 3வது இடத்திலும், தீபிகா படுகோனே திருமண செய்தி 8வது இடத்திலும், சோனம் கபூரின் திருமண செய்தி 10வது இடத்திலும் உள்ளன.

    எப்படி?

    எப்படி?

    வாட்ஸ்ஆப்பில் ஸ்டிக்கர்களை அனுப்புவது எப்படி, செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி, ரங்கோலி வரைவது எப்படி, செல்போன் எண்ணை போர்ட் செய்வது எப்படி, பிட்காயினில் முதலீடு செய்வது எப்படி என்றும் பலர் கூகுளில் தேடியுள்ளனர்.

    English summary
    According to Google India, Malayalam actress Priya Prakash Varrier is the most searched personality in the year 2018.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X