என்ன இவங்களும் இப்படி இறங்கிட்டாங்க.. கில்லர் லுக்கில் பிரபல நடிகை.. இளவரசியே என புகழும் ஃபேன்ஸ்!
சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள கில்லர் லுக் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
'ஒரு அடார் லவ்' என்ற மலையாள படம் மூலம் பிரபலமானவர், பிரியா பிரகாஷ் வாரியர்.
இந்தப் படத்துக்காக புருவத்தை சுருக்கியும், கண்ணடித்தும், விரல்களை துப்பாக்கியாக்கி காதலனை சுடுவதுபோல நடித்திருந்த காட்சி ஹிட்டானது.

பேசப்படும் நடிகை
இதன் மூலம் ஒரே நாளில் நாடு முழுவதும் பேசப்படும் நடிகையாக மாறினார் பிரியா வாரியர். இந்தப் படத்தில் அவர் பள்ளி மாணவியாக நடித்தார். அவர் காட்டிய முக பாவனைகள், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்று தந்தது. இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது.

ஶ்ரீதேவி பங்களா
படத்தின் டிரைலருக்கு கிடைத்த வரவேற்பு, படத்துக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து 'ஶ்ரீதேவி பங்களா' என்ற படத்தில் நடித்தார். இது நடிகை ஶ்ரீதேவி இறந்த சில மாதங்களுக்கு பின் உருவானதால், சர்ச்சையானது. இந்தப் படத்தில் ஶ்ரீதேவி பெயரை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியது.

இன்ஸ்டாகிராம்
இதன் டிரைலர் சமீபத்தில் வெளியானது. படம் விரைவில் வெளியாக இருக்கிறது. கன்னடத்தில் கிரிக் லவ் ஸ்டோரி, தெலுங்கில் லவ்வர்ஸ் டே படங்களில் நடித்தார், பிரியா. இருந்தாலும் தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை. மலையாளத்திலும் அவருக்கு அதிக படங்கள் கிடைக்கவில்லை.

ஆபாச கமென்ட்
கன்னடத்தில் விஷ்ணுப்ரியா என்ற படத்தில் நடித்துள்ள அவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பெருகினர். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திடீரென்று விலகினார். ஆபாசமான கமென்ட்கள் அதிகமாக வந்ததால் அவர் அதில் இருந்து வெளியேறியதாகக் கூறப்பட்டது.

போட்டோஷூட்
இந்நிலையில் 15 நாட்களுக்குப் பிறகு அவர், மீண்டும் இன்ஸ்டாகிராமுக்கு திரும்பினார். இந்நிலையில் இப்போது அவர் கிளாமராக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பாரம்பரிய நகைகள் அணிந்து அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கான லைக்ஸ் விழுந்துள்ளது.

இளவரசி போலவே
பல நெட்டிசன்ஸ், அவர் அழகை அப்படி புகழ்ந்துள்ளனர். பலர் இளவரசி போலவே இருப்பதாவும் ஸ்டன்னிங், கில்லர் லுக் என்றும் கூறியுள்ளனர். சில நடிகைகளும் இந்த புகைப்படங்களுக்கு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











