நிர்வாணக் கோலத்தில் பிரியா பிரகாஷ் வாரியர்.. சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீதேவி பங்களா புது டிரைலர்!

சென்னை: கண்ணை சிமிட்டி ஓவர் நைட்டில் இந்தியளவில் புகழை சேர்த்த கேரள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் நடிப்பில் உருவாகி உள்ள ஸ்ரீதேவி பங்களா படத்தின் புது டிரைலர் வெளியாகி உள்ளது.

பிரபல இயக்குநர் பிரசாந்த் மம்புலி இந்த படத்தை இயக்கி உள்ளார். பாலிவுட் நடிகை ஒருவரின் மர்ம மரணத்தை பற்றிய படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி பெயரை படத்திற்கு வைக்கக் கூடாது என்று சர்ச்சைகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

மோகன் லால் ரிலீஸ்

மோகன் லால் ரிலீஸ்

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன் லால் இந்த மூன்றாவது டிரைலரை வெளியிட்டுள்ளார். இயக்குநர் பிரசாந்த் மம்புலி மற்றும் படக்குழுவினருக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். தற்போது வெளியாகி இருக்கும் ஸ்ரீதேவி பங்களா படத்தின் புது டிரைலரிலும் சர்ச்சைக்குரிய ஏகப்பட்ட காட்சிகள் இருப்பதாக நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.

நிர்வாணக் கோலத்தில்

நிர்வாணக் கோலத்தில்

தற்போது வெளியாகி இருக்கும் இந்த மூன்றாவது டிரைலரில் படத்தின் நாயகி பிரியா பிரகாஷ் வாரியர் இரண்டு இடங்களில் நிர்வாணக் காட்சியில் நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்று பரபரப்பை கிளப்பி உள்ளன. மேலும், பாத் டப்பில் நிர்வாணக் கோலத்தில் அமர்ந்தபடி இருக்கும் காட்சி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

வெளிநாடுகளில் ஷூட்டிங்

வெளிநாடுகளில் ஷூட்டிங்

இந்த படத்தின் ஷூட்டிங் மும்பை, பாங்காக், லண்டன் உள்ளிட்ட இடங்களில் ஷூட் செய்யப்பட்டு இருக்கிறது. பிரியா பிரகாஷ் வாரியர், அர்பாஸ் கான், பிரியம்ஷு சாட்டர்ஜி, அசீம் அலி கான், முகேஷ் ரிஷி மற்றும் லீ நிகோலஸ் ஹாரிஸ் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒடிடி ரிலீஸ்

ஒடிடி ரிலீஸ்

ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு டிரைலர்கள் விடப்பட்டு, தற்போது 3வது டிரைலரும் வெளியாகி இருக்கிறது. சீக்கிரமே இந்த படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. விரைவில் அது தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு இந்தி படம்

மற்றொரு இந்தி படம்

ஒரு அடார் லவ் எனும் மலையாளம் படத்தில் வந்த பாடல் காட்சியில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் கண்ணடித்து, காதல் அம்பு விட்டது ஏராளமான இந்திய இளைஞர்களின் நெஞ்சுகளில் குத்தியது. மலையாளம் மற்றும் இந்தி படமாக உருவாகி வரும் ஸ்ரீதேவி பங்களாவை அடுத்து லவ் ஹேக்கர் எனும் மற்றொரு இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X