‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்

ஸ்ரீதேவி பங்களா படக்குழுவினருக்கு எதிராக நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.

மும்பை: ஸ்ரீதேவி பங்களா பட டிரெய்லரில் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கணவர் போனி கபூர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் துபாய் ஹோட்டல் ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்தார் நடிகை ஸ்ரீதேவி. குளியலறை நீர்த்தொட்டியில் மூழ்கி அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தொடர்ந்து அவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் உலா வருகின்றன.

இந்நிலையில், ஸ்ரீதேவி பங்களா என்ற பெயரில் பாலிவுட்டில் ஒரு படம் தயாராகியுள்ளது. இது மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு எனக் கூறப்படுகிறது. பிரசாந்த் மம்பல்லி இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிகையாக நடித்துள்ளார் பிரியா வாரியார்.

ஸ்ரீதேவி பங்களா டீசர்:

ஸ்ரீதேவி பங்களா டீசர்:

இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு நிமிடம் 49 நொடிகள் ஓடக்கூடிய இதில், பிரியா வாரியார் மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோவானது, வித் லவ் ஸ்ரீதேவி என்ற காட்சியில் ஆரம்பித்து, குளியல் தொட்டியில் இரண்டு கால்கள் தெரிவது போன்று முடிவடைகிறது.

மர்ம முடிச்சுகள் அவிழுமா?

மர்ம முடிச்சுகள் அவிழுமா?

இது நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தைக் குறிப்பதைப் போல் அமைந்துள்ளதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ஸ்ரீதேவியின் மரணம் பற்றிய மர்ம முடிச்சுகள் இப்படத்தில் அவிழ்க்கப்படலாம் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

போனி கபூர் நோட்டீஸ்:

போனி கபூர் நோட்டீஸ்:

இது ஒருபுறம் இருக்க, இந்தப் படக் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், ஸ்ரீதேவி பங்களா படக் குழுவினருக்கு சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். பிரியா வாரியாருக்கும் இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

இயக்குநர் அறிவிப்பு:

இயக்குநர் அறிவிப்பு:

இந்த சட்டரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அப்பட இயக்குனர் பிரசாந்த் மம்பல்லி கூறியுள்ளார். ‘ஸ்ரீதேவி பங்களா' என்ற படத்தில் ஸ்ரீதேவி ஒரு பொதுவான பெயர். என் படத்தின் நாயகி கதாபாத்திரம் ஒரு நடிகை. எனவே, இதனை நாங்கள் அதை எதிர்கொள்வோம்' என அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் சர்ச்சை நாயகி:

ஏற்கனவே, ‘ஒரு அடார் லவ்' என்ற மலையாள படத்தின் ஒரே பாடலில் புருவ அசைவு மூலம் தேசிய அளவில் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியார். இந்நிலையில் இவரின் 'ஸ்ரீதேவி பங்களா' படத்தின் டீஸர் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X