லவ் ஹேக்கர்ஸ்.. சர்ச்சைகளில் சிக்கினாலும் தொடர்ந்து ரிஸ்க் எடுக்கும் பிரியா வாரியார்!
லவ் ஹேக்கர்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரியா வாரியார்.
Recommended Video
சென்னை: ஸ்ரீதேவி பங்களா படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார் பிரியா வாரியார்.
மலையாளப் படமான தி அடார் லவ் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பிரியா வாரியார். படம் ரிலீசுக்கு முன்னரே அப்படத்தில் இடம் பெற்ற காட்சியால் பிரபலமானார். அக்காட்சியில் அவர் செய்திருந்த புருவ அசைப்பு மூலம் அதிக ரசிகர்களை சம்பாதித்தார்.
ஆனால், அக்காட்சி மூலமே அவர் சர்ச்சையிலும் சிக்கினார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரிலீசான அப்படத்தில், பிரியாவின் நடிப்பை விட மற்றொரு நாயகியான நூரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

ஸ்ரீதேவி பங்களா:
இது ஒருபுறம் இருக்க, அடுத்ததாக ஸ்ரீதேவி பங்களா என்ற பாலிவுட் படத்தில் பிரியா நடித்தார். இது மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு எனக் கூறப்படுகிறது. இப்படத்தின் டிரெய்லரில் இடம் பெற்றிருந்த காட்சிகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.

போனி கபூர் வழக்கு:
இப்படத்திற்கு எதிராக பிரபல தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் வழக்குத் தொடர்ந்தார். இதனால் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் பிரியா. இந்த பரபரப்புகள் ஒருபுறம் இருக்க, மீண்டும் ஒரு இந்திப் படத்தில் நடிக்க இருக்கிறார் அவர்.

லவ் ஹேக்கர்ஸ்:
இதுவும் ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் படம் தான். எதிர்பாராத சூழ்நிலை ஒன்றில் சிக்கிக் கொள்ளும் பெண் ஒருவரைப் பற்றிய கதைக்களம். இப்படத்திற்கு லவ் ஹேக்கர்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. க்ரைம் திரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதியில் ஆரம்பமாக இருக்கிறது.

ரசிகர்கள் கவலை:
தொடர்ந்து தான் நடித்த படங்கள் மூலம் சர்ச்சையில் சிக்கிய பிரியா, இப்படத்தின் மூலம் என்ன பிரச்சினையில் சிக்கப் போகிறார் எனத் தெரியவில்லை. இதுவும் உண்மைக்கதை என்பதால் நிச்சயம் ஏதாவது சர்ச்சையில் சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏன் இப்படி சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என பிரியாவின் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications