இன்ஸ்டாகிராமில் இருந்து திடீரென்று விலகியது இதற்காகத்தான்.. 'கண்ணடி' நடிகை விளக்கம்!
சென்னை: இன்ஸ்டாகிராமில் இருந்து திடீரென விலகிய பிரபல கண்ணடி நடிகை, மீண்டும் திரும்பியுள்ளார்.
'ஒரு அடார் லவ்' என்ற மலையாள படம் மூலம் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர்.
இவர் புருவத்தை சுருக்கியும், கண்ணடித்தும், விரல்களை துப்பாக்கிபோல் செய்து அதில் முத்தமிட்டு காதலனை சுடுவதுபோலவும் நடித்திருந்த காட்சி, பரபரப்பானது.

ரசிகர்கள்
இதன் மூலம் ஒரே நாளில் நாடு முழுவதும் பேசப்படும் நடிகையாக மாறினார் பிரியா வாரியர். இஸ்லாமிய மதத்தினரை புண்படுத்தும் காட்சி ஒன்றில் நடித்திருப்பதாகக் கூறி அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஒரு அடார் லவ் படத்தில் அவர் பள்ளி மாணவியாக நடித்தார். அவர் காட்டிய முக பாவனைகள், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்று தந்தது.

தமிழில் டப் ஆனது
இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. படத்தின் டிரைலருக்கு கிடைத்த வரவேற்பு, படத்துக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து 'ஶ்ரீதேவி பங்களா' என்ற படத்தில் நடித்தார். இது நடிகை ஶ்ரீதேவி இறந்த சில மாதங்களுக்கு பின் உருவானதால், சர்ச்சையானது. இந்தப் படத்தில் ஶ்ரீதேவி பெயரை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியது.

இன்ஸ்டாகிராம்
கன்னடத்தில் கிரிக் லவ் ஸ்டோரி, தெலுங்கில் லவ்வர்ஸ் டே ஆகிய படங்களில் நடித்தார், பிரியா. இருந்தாலும் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை. மலையாளத்திலும் அவருக்கு அதிக படங்கள் கிடைக்கவில்லை. கன்னடத்தில் விஷ்ணுப்ரியா என்ற படத்தில் நடித்து வரும் அவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பெருகினர். அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறவர்களின் எண்ணிக்கை 72 லட்சத்தைத் தாண்டியது.

பரபரப்பு
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திடீரென்று விலகினார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் அவரும் ஒருவர். அவருக்கு ஆபாசமான கமென்ட்கள் அதிகமாக வந்ததால் அவர் அதில் இருந்து வெளியேறியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் 15 நாட்களுக்குப் பிறகு அவர் மீண்டும் இன்ஸ்டாகிராமுக்கு வந்துள்ளார்.
Recommended Video

மன ஆரோக்கியம்
அதில் வீடியோவில் பேசியுள்ள அவர், என் மீது அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி. மன ஆரோக்கியம் மற்றும் அமைதிக்காக இன்ஸ்டாவில் இருந்து வெளியேறினேன். லைக்ஸ் மற்றும் பாலோயர்கள், வியூஸ் பற்றிய மன அழுத்தத்தில் இருந்தேன். கடந்த இரண்டு வாரமாக இந்தப் பிரச்னைகள் ஏதுமின்றி மகிழ்ச்சியாக கழித்தேன். இது என் தொழிலுக்கான இடமுமாக இருப்பதால் மீண்டும் வந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











