Actor Dhanush: தனுஷின் டிடி3 படம்.. படத்தில் இணைந்த கலர்புல் காம்பினேஷன்
சென்னை: நடிகர் தனுஷ் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக உள்ளார். கோலிவுட்டில் துவங்கிய அவரது பயணம் தற்போது ஹாலிவுட்டிலும் தொடர்ந்து வருகிறது.
மேலும் டோலிவுட், பாலிவுட் ரசிகர்களையும் தன்னுடைய படங்களின்மூலம் கவர்ந்து பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார் தனுஷ்.

நடிப்புடன் இயக்கம், தயாரிப்பு, பாடகர், பாடலாசிரியர் என அடுத்தடுத்து பன்முக திறமை கொண்டவராகவும் மாஸ் காட்டி வருகிறார் தனுஷ்.
நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் நடிகராக கோலிவுட்டில் மட்டுமில்லாமல் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக உள்ளார். அவரது நடிப்பில் அடுத்தடுத்து திருச்சிற்றம்பலம், வாத்தி படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்துள்ளன. இந்நிலையில் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளது. படம் பீரியட் படமாக சுதந்திர போராட்ட காலகட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
கேப்டன் மில்லர் படம்: இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி சிறப்பாக அமைந்த நிலையில் படத்தின் முதல் பாடலும் மிகச்றிப்பாக அமைந்தது. கில்லர் கில்லர் என்ற இந்தப் பாடலை கேபர் வாசுகி எழுதியிருந்த நிலையில், தனுஷ் பாடியிருந்தார். இந்நிலையில் நாளைய தினம் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெலடி மற்றும் ரொமாண்டிக் பாடலாக இந்தப் பாடல் உருவாகியுள்ளது. படத்தில் பிரியங்கா மோகன் தனுஷிற்கு ஜோடியாகியுள்ள நிலையில், அவர்களின் டூயட் பாடலாக இந்தப் பாடல் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தனுஷ் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்கள்: இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் டி50 படத்தை இயக்கி முடித்துள்ளார் தனுஷ். கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே சிறிதும் ஓய்வின்றி தன்னுடைய அடுத்தப்படத்தின் சூட்டிங்கையும் துவங்கியுள்ளார் தனுஷ். தனுஷ் இந்தப் படத்தை இயக்கி, தயாரித்து முக்கியமான கேரக்டரிலும் நடிக்கவுள்ளார்.
மீண்டும் தயாரிப்பு: நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் தன்னுடைய தயாரிப்பை துவங்கியுள்ள தனுஷ், டிடி3 படத்தை பக்கா காதல் படமாக இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் தன்னுடைய அக்கா மகனை ஹீரோவாக்கியுள்ளார் தனுஷ். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் இணைந்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சரத்குமாரும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார். தனுஷும் கேமியோ ரோலில் இணைந்துள்ள இந்தப் படத்தில் மற்றும் புதிய வரவுகளாக பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் ஆகியோரும் முக்கியமான கேரக்டர்களில் நடிக்க தற்போது கமிட்டாகியுள்ளனர்.
24ம் தேதி முக்கிய அறிவிப்பு: இந்தப் படத்தின் முக்கியமான அப்டேட் வரும் 24ம் தேதி வெளியாகவுள்ளதாகவும் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் அப்டேட் தெரிவித்துள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் உள்ளிட்ட அப்டேட்டாக அது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திலும் ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக இணைந்துள்ள நிலையில், படத்தின் சில பாடல்களை அவர் முடித்துவிட்டதாக சமீபத்திய பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார். மயக்கம் என்ன படம் போன்று, இந்தப் படமும் பக்கா காதல் படமாக எடுக்கப்பட உள்ளதாகவும் இந்தப் படத்தை தனுஷை தவிர வேறு யாரும் சிறப்பாக எடுக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











