சச்சின் டெண்டுல்கரை சந்தித்த புருவ அழகி பிரியா வாரியர்!

By Vignesh Selvaraj

கொச்சின் : ஒரே பாடலில் கண் சிமிட்டல் மூலம் உலகப் புகழ்பெற்ற புருவ அழகி பிரியா பிரகாஷ் வாரியர் தான் கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்திருந்தார். சமூக வலைதளங்கள் முழுக்க பிரியா வாரியர் பற்றிய பேச்சாகவே இருந்தது.

பிரியா வாரியர் இடம்பெற்றிருந்த பாடல் வரிகள் குறித்த சர்ச்சையால் இவர் மீதும் சில மாநிலங்களில் வழக்கு தொடுக்கப்பட்டு, அதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு பிரியா வாரியர் மீதான நடவடிக்கையை செய்ததில் இன்னும் பரபரப்பாகி விட்டார் பிரியா வாரியர்.

Priya varrier meets Sachin

இந்த நிலையில் நேற்று கொச்சியில் நடைபெற்ற இந்தியன் சூப்பர்லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணியுடன் மோதிய கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை உற்சாகப்படுத்துவதற்காக பிரியா வாரியரும், அவருடன் 'ஒரு அடார் லவ்' படத்தில் புருவம் உயர்த்தி பிரபலமான நடிகர் ரோஷனும் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியை காண கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரும் வந்திருந்தார். அவரை ஸ்டேடியத்தில் சந்தித்த பிரியா வாரியர், தங்களது கேரள அணியின் ஜெர்ஸியை அவரிடம் வழங்கி உற்சாகமாக புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனால் பிரியா வாரியர் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X