கட்சி போஸ்டரில் இடம்பெற்ற வைரல் நாயகி பிரியா வாரியர்!

By Vignesh Selvaraj

Recommended Video

கடைசியில் கட்சி போஸ்டர் வரை வந்த பிரியா வாரியர்- வீடியோ

திருவனந்தபுரம் : ஒரே ஒரு கண் சிமிட்டலின் மூலம் சமூக வலைத்தளங்களில் செம வைரலானவர் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.

இவர் நடித்து வரும் 'ஒரு அடார் லவ்' படத்தின் டீசரில் வரும் பாடலில் இவருடைய புருவ நெளிப்பு மற்றும் கண்சிமிட்டல் நாடு முழுவதும் பிரபலம் ஆனது.

இந்நிலையில், சிபிஐ கட்சி போஸ்டரில் 'ஒரு அடார் லவ்' படத்தின் டீசரில் பிரபலமடைந்த நடிகை பிரியா வாரியரின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

பிரியா வாரியர்

பிரியா வாரியர்

கேரளாவைச் சேர்ந்த இளம் நடிகையான பிரியா பிரகாஷ் வாரியர் 'ஒரு அடார் லவ்' படத்தின் டீசர் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். அதனால் அவருக்கு பல மொழிகளிலும் இருந்தும் பட வாய்ப்புகள் குவிந்துவருகிறது.

சர்ச்சைகள்

சர்ச்சைகள்

'ஒரு அடார் லவ்' படத்தின் டீசரில் கண் அடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது முஸ்லீம்களின் மத நம்பிக்கைகளை பாதிக்கும் விதமாக இருப்பதாக தெரிவித்து புகார் அளிக்கப்பட்டது. அந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் தடை செய்ததால் இன்னும் பரபரப்பாகி விட்டார்.

போஸ்டரில் பிரியா படம்

போஸ்டரில் பிரியா படம்

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அணி சார்பில் ஆண்டுதோறும் நடைப்பெறும் கலைத்துறை கருத்தரங்கு நிகழ்ச்சிக்கான போஸ்டரில் பிரியா வாரியரின் படம் அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அச்சடிக்கப்பட்ட போஸ்டர்கள் கேரளா முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

ஒரு அடார் லவ் டிசைன்

ஒரு அடார் லவ் டிசைன்

கலைத்துறையினரின் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை பாதுகாக்கவும், ஆண்டுதோறும் நடைபெறும் மாநில கருத்தரங்கை பிரபலபடுத்தும் வகையிலும், சிபிஐ (எம்) கட்சியைச் சேர்ந்த மாணவர் பிரிவு (CPI (M)), பிரியா பிரகாஷ் வாரியரின் 'ஒரு அடார் காதல்' படத்தின் டிசைனில் போஸ்டர் செய்துள்ளனர்.

கேரளா முழுக்க

கேரளா முழுக்க

அந்தப் போஸ்டரில் பிரியா கண்ணடிக்கும் படத்தையும் இடம்பெறச் செய்துள்ளனர். மார்ச் 1 ஆம் தேதி தொடங்கிய இந்த மாநில கருத்தரங்கு போஸ்டர் கேரள மாநிலம் முழுவதும் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X