இந்த நடிகையும் இப்படி ஆரம்பிச்சுட்டாங்களே.. பிரியா வாரியர் போட்டோவ பாருங்க!
சென்னை: கண்ணடித்து நாட்டையே சொக்கவைத்த நடிகை பிரியா வாரியர் ஒத்த போட்டோவை போட்டு மீண்டும் வைரலாகி இருக்கிறார்.
நடிகை பிரியா வாரியர் ஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தில் பள்ளி மாணவியாக நடித்தார். இந்த படத்தில் அவர் புருவங்களை உயர்த்தி விரல்களை துப்பாக்கியாக்கி கண்ணடித்த காட்சி பெரிதும் பேசப்பட்டது.
இந்த காட்சிகள் பெருமளவில் வைரலாயின. காங்கிரஸ் அப்போதைய தேசிய தலைவராக இருந்த ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியிடம் பேசிவிட்டு கண்ணடித்ததை இந்தக் காட்சியை வைத்து ட்ரொல் செய்தனர்.

நீச்சல் உடையில்
இந்த ஒரு படத்தின் மூலம் பெரும் பிரபலமான நடிகை பிரியா வாரியருக்கு தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் நடிகை பிரியா வாரியரும் மற்ற நடிகைகளை போல நீச்சல் உடையில் போட்டோ எடுத்து போஸ்ட் செய்துள்ளார்.

நீச்சல் உடை
அழகும் திறமையும் ஒன்று சேர்ந்த நடிகை பிரியா வாரியர் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் குளித்தப்படியே தனது போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். பிரியா வாரியரின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
70 லட்சம் ஃபாலோயர்ஸ்
பிரியா வாரியரின் இந்த நீச்சல் உடை போட்டோவை இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் லைசெய்துள்ளனர். பிரியா வாரியரை 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சமூக வலைதளங்களில் பின்பற்றி வருகின்றனர்.
கன்னடத்தில் அறிமுகம்
பிரியா வாரியரின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் செம, க்யூட் என புகழ்ந்து வருகின்றனர். நடிகை பிரியா வாரியர் விஷ்னுபிரியா என்ற படத்தின் மூலம் கன்னடத்திலும் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











